For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SA 3rd ODI – கோலிக்கு ஓய்வு..? இந்திய அணியில் 4 மாற்றங்கள்..! ஆறுதல் வெற்றி பெற்ற தீவிரம்..!

கேப் டவுன்: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி கேப் டவுனில் நாளை தொடங்குகிறது.

இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரை தென்னாப்பிரிக்க அணி ஏற்கனவே வென்றது.

இந்த நிலையில், ஆறுதல் வெற்றி பெற இந்தியாவும், தொடரை முழுமையாக வெல்ல தென்னாப்பிரிக்காவும் நாளைய போட்டியில் மோதுகிறது.

கோலிக்கு ஓய்வு

கோலிக்கு ஓய்வு

ஒருநாள் தொடரில் இந்திய அணியின் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டும் மோசமாகவே இருந்தது. இந்த நிலையில், மூன்றாவது போட்டியில் அணியில் அதிரடி மாற்றங்களை செய்ய டிராவிட் முடிவு எடுத்துள்ளார். கடைசி போட்டியில் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு தரப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ருத்துராஜ்க்கு வாய்ப்பு

ருத்துராஜ்க்கு வாய்ப்பு

ஒரு வேளை கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டால் சி.எஸ்.கே. வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்க்கு ஓபனிங் வாய்ப்பு தரப்பட்டு, ராகுல் 3வது வீரராக களமிறங்கலாம். இதே போன்று வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக முகமது சிராஜூம், பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. கேப் டவுனில் பந்து நன்றாக குறும், இதனால் உயரமான பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்

சூரியகுமார் யாதவ்

சூரியகுமார் யாதவ்

இதே போன்று தொடர்ந்து 2 போட்டிகளில் சொதப்பிய ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் மீண்டும் அணிக்கு வர உள்ளதாக தெரிகிறது. இதே போன்று அஸ்வினுக்கும் ஓய்வு வழங்கப்பட்டு ஜெயந்த் யாதவ் அணிக்குள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இளம் வீரர்களை வைத்து கடைசி போட்டியை சந்திக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிளேயிங் XI

பிளேயிங் XI

கோலி, பும்ரா, அஸ்வின் ஆகியோர் தொடர்ந்து விளையாடி வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. மேலே சொன்ன 5 மாற்றங்களில் குறைந்தபட்சம் 3 அல்லது 4 மாற்றங்கள் நிகழ கண்டிப்பாக வாய்ப்புள்ளது. உத்தேச அணி 1, ஷிகர் தவான், 2, ருத்துராஜ் கெய்க்வாட், 3, கே.எல் ராகுல், 4, சூரியகுமார் யாதவ், 5, ரிஷப் பண்ட், 6,வெங்கடேஷ் ஐயர், 7,ஷர்துல் தாக்கூர். 8, ஜெயந்த் யாதவ், 9, சாஹல், 10, முகமது சிராஜ், 11, பும்ரா/பிரசித் கிருஷ்ணா. (கோலி விளையாடினால், ராகுல் ஓபனிங் இறங்கி கோலி தனது இடத்தில் விளையாடுவார்)

Story first published: Saturday, January 22, 2022, 18:59 [IST]
Other articles published on Jan 22, 2022
English summary
India vs SA 3rd ODI Kohli might Rested, India making 4 changes in Playing xi IND vs SA 3rd ODI – கோலிக்கு ஓய்வு..? இந்திய அணியில் 4 மாற்றங்கள்..! ஆறுதல் வெற்றி பெற்ற தீவிரம்..!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+