இந்தியா VS இலங்கை முதல் டி20 – நாளை மோதல், பிளேயிங் XI பிட்ச் ரிப்போர்ட்
லக்னோ: இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை லக்னோவில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதற்காக இரு அணிகளும் லக்னோவில் முகாமிட்டு தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

பின்னடைவு
இந்திய அணியை பொறுத்தவரை பலம் வாய்ந்த மேற்கிந்திய தீவுகள் அணியை முழுமையாக வீழ்த்திய உத்வேகத்துடன் உள்ளது. இருப்பினும் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது சூரியகுமார் யாதவும் காயம் காரணமாக விலகியுள்ளது பின்னடைவாக கருதப்படுகிறது.

திரும்பிய நட்சத்திரங்கள்
எனினும் ஜடேஜா, பும்ரா, சஞ்சு சாம்சன் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளது சாதகமாக பார்க்கப்படுகிறது. தொடக்க வீரராக இஷான் கிஷன் மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நடுவரிசையில் களமிறங்கலாம்.

இலங்கை அணி
இலங்கை அணியை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணியிடம் 4க்கு1 என்ற கணக்கில் டி20 தொடரை இழந்துள்ளது. எனினும் இந்திய சூழலில் அந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது அசலங்கா, ஹசரங்கா, சந்திமால், சானுக்கா,குசல் மெண்டீஸ் போன்ற திறமையான பேட்ஸ்மேன்களும், தீக்சனா, கருணரத்னே போன்ற அசத்தலான பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.

பிளேயிங் லெவன்
ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருந்தாலும், பனிப்பொழிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்திய உத்தேச அணி, 1, இஷான் கிஷன், 2, ருத்துராஜ் 3, ரோகித் சர்மா, 4, சஞ்சு சாம்சன், 5, ஸ்ரேயாஸ் ஐயர், 6, வெங்கடேஷ் ஐயர், 7, ஜடேஜா, 8, ஹர்சல் பட்டேல், 9, முகமது சிராஜ், 10, பும்ரா, 11, சாஹல்/பிஸ்னாய்


Click it and Unblock the Notifications