
தொடக்க ஜோடி
இலங்கை அணி வீரர்கள் 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீச, அதனை அல்வா போல் ரோகித் சர்மாவும், மாயங் அகர்வாலும் ரன்களை விளாசினர்.குறிப்பாக ரோகித் சர்மா 6 பவுண்டரிகளை விளாசினார். 28 பந்துகளில் 29 ரன்கள் விளாசி ரோகித் ஆட்டமிழக்க, மாயங் அகர்வால் 33 ரன்களில் வெளியேறினார்.

கோலி ஏமாற்றம்
இதன் பின்னர் 3வது வீரராக களமிறங்கிய ஹனுமா விஹாரி, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் ரசிகர்களின் உற்சாக வரவேற்புக்கு நடுவில் விராட் கோலி தனது 100வது டெஸடில் களமிறங்கி தனது டிரெட் மார்க் ஷாட்களை ஆடி ரன்களை சேர்த்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.

விஹாரி அரைசதம்
விஹாரி 58 ரன்களில் வெளியேற, ஸ்ரேயாஸ் ஐயரும், ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பொறுமையாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களில் எல்.பி. டபிள்யூ ஆனார். இதனைத் தொடர்ந்து ஜடேஜா, ரிஷப் பண்ட் ஜோடி அதிரயாக விளையாடி ரன்களை குவித்தது.

ரிஷப் அதிரடி
குறிப்பாக ரிஷப் பண்ட் அரைசதம் கடந்ததும் ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் போல் ரன்களை குவிக்க தொடங்கினார். 75 பந்துகளில் அரைசதம் அடித்த ரிஷப் பண்ட், அடுத்த 8 பந்துகளில் 32 ரன்கள் விளாச, ஸ்கோர் ராக்கெட் வேகத்துக்கு உயர்ந்தது. சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 96 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டம் நேரம் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் அடித்துள்ளது. தற்போது ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் களத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











