For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா.. 3 டாப் கிளாஸ் வீரர்கள் மிஸ்ஸிங் - பெரும் சிக்கலில் இந்திய அணி

கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான 2வது டி20 போட்டியில் இந்திய அணி சில முக்கிய வீரர்களை இழக்க நேரிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற நிலையில் கைப்பற்றிய இந்திய அணி, கடந்த ஞாயிறன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இலங்கை வீழ்த்தி இருந்தது.

கொரோனா

கொரோனா

இந்த நிலையில் தான், இந்திய வீரர் க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (ஜுலை.27) உறுதி செய்யப்பட்டது. இதனால், நேற்றே நடைபெறவிருந்த 2வது டி20 போட்டி இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, இரு அணி வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

3 வீரர்கள் மிஸ்ஸிங்

3 வீரர்கள் மிஸ்ஸிங்

இதில், வேறு எந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. எனவே, 2வது டி20 போட்டி திட்டமிட்டப்படி இன்று நடைபெறும் என்று தெரிகிறது. அதேசமயம், க்ருனால் பாண்ட்யாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்த ப்ரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகிய மூவரும் இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பின்னடைவு

பின்னடைவு

இவர்கள் மூவருக்கும் கொரோனா நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தாலும், 2வது மற்றும் கடைசி டி20 போட்டி என இரண்டு போட்டியிலும் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிகிறது. முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த சூர்யகுமார் இந்த போட்டியில் விளையாடவில்லை எனில், அது இந்திய அணிக்கு நிச்சயம் பெரும் பின்னடைவாக அமையும்.

டெஸ்ட் தொடருக்கும் மிஸ்ஸிங்

டெஸ்ட் தொடருக்கும் மிஸ்ஸிங்

அதுமட்டுமின்றி, வரும் ஆகஸ்ட் 4ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ள இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான டெஸ்ட் தொடருக்கு ப்ரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். வாஷிங்டன் சுந்தர் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், அவர்களுக்கு பதிலாக ஷாவும், சூர்யாவும் இங்கிலாந்து அழைக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது இவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதால், இங்கிலாந்து சென்று அணியுடன் இணைய முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Story first published: Wednesday, July 28, 2021, 16:48 [IST]
Other articles published on Jul 28, 2021
English summary
Ind vs SL 2nd T20I Shaw, Kishan, Surya may miss - க்ருனால்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+