Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“டாஸிலேயே முடிவு தெரியும்”.. முதல் ஒருநாள் போட்டியில் யாருக்கு வெற்றி? போலாந்து பிட்ச் ரெக்கார்ட்!

பார்ல்: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டாஸின் போதே எந்த அணிக்கு வெற்றி என்பதை தீர்மானிக்கும் அளவிற்கு புள்ளிவிவரங்கள் மோசமாக உள்ளன.

இரு அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

டெஸ்ட் தொடரில் 2- 1 என தோல்வியடைந்த இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

முதல் ஒருநாள் ஆட்டம்

முதல் ஒருநாள் ஆட்டம்

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி பார்ல் நகரத்தில் உள்ள போலாந்து பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தான் தேர்வு செய்தாக வேண்டும். ஒருவேளை டாஸில் தோல்வியடைந்து பவுலிங் வீச நேரிட்டால் வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கப் போகிறது.

அதிக ஸ்கோர்

அதிக ஸ்கோர்

போலாந்த் பார்க் மைதானத்தின் பிட்ச்-ஐ பொறுத்தவரை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவும். எனினும் முதலில் பேட்டிங் செய்யும் அணி நிதானமாக பிட்ச்-ஐ கவனித்து ஆடினால் நிச்சயம் 300+ ரன்கள் இலக்காக நிர்ணயிக்கலாம். ஆனால் 2வதாக பேட்டிங் செய்யும் அணிக்கு அவ்வளவு எளிதாக இருக்காது. 50 ஓவர்கள் வீசப்பட்ட பிட்ச், 2வது இன்னிங்ஸில் சற்று சேதமாகி ஸ்விங் அதிகமாக கொடுக்கும்.

யாருக்கு அதிர்ஷ்டம்

யாருக்கு அதிர்ஷ்டம்

இதுவரை இங்கு 13 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 7 முறை முதலில் பேட்டிங் செய்யும் அணியும், 5 முறை 2வதாக பேட்டிங் செய்யும் அணியும் வெற்றி கண்டுள்ளன. முதல் இன்னிங்ஸில் சராசரியாக 300 ரன்கள் சேர்ந்துள்ளன. ஆனால் 250 ரன்கள் என்பதே இங்கு சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்காக உள்ளது. இந்திய அணி ஒருமுறை 204 ரன்களை இங்கு கட்டுப்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆனால் 250 ரன்களுக்கு மேல் எந்த அணியும் விரட்டியது இல்லை.

Recommended Video

Baby Ab de Villiers: South Africa U19's Dewald Brevis goes viral | OneIndia Tamil
இந்திய அணி ரெக்கார்ட்

இந்திய அணி ரெக்கார்ட்

இந்த மைதானத்தில் இந்திய அணி 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆனால் 3 போட்டிகளுமே தென்னாப்பிரிக்காவுடன் இல்லை. 2003ம் ஆண்டு உலகக்கோப்பையின் போது மற்ற அணிகளுடன் விளையாடியது. இதில் 2 வெற்றிகளும் ஒரு போட்டி சமனிலும் முடிவடைந்துள்ளது. தென்னாப்பிரிக்க அணி இங்கு 8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளை பெற்றுள்ளது. ஒன்றில் தோல்வியும், ஒன்றில் முடிவு எட்டப்படவில்லை. எனவே இரு அணிகளும் இங்கு சம பலத்துடன் உள்ளது.

Story first published: Wednesday, January 19, 2022, 20:17 [IST]
Other articles published on Jan 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+