Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா Vs தென்னாப்பிரிக்கா - நாளை முதல் ஒருநாள் போட்டி - இளம் வீரர்களுக்கு வாய்ப்பு.. பிளேயிங் XI

லக்னோ : இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை வியாழக்கிழமை மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் ரோகித், கோலி, ராகுல் உள்ளிட்ட பல்வேறு சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், டி20 உலககோப்பையில் பங்கேற்பதற்காக முன்னணி வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்கின்றனர்.

இதனையடுத்து, ஷிகர் தவான் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட உள்ளார்.

தொடக்க வீரர் யார் ?

தொடக்க வீரர் யார் ?

முதல் போட்டி வியாழக்கிழமை லக்னோவிலும், 2வது ஒருநாள் போட்டி வரும் ஞாயிற்றுகிழமை ராஞ்சியிலும், மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் செவ்வாய்கிழமை டெல்லியிலும் நடைபெறுகிறது. சிஎஸ்கே வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், சுப்மான் கில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் ஷிகர் தவானுக்கு பதில் ஜோடியாக சுப்மான் களமிறங்குவாரா இல்லை ருத்துராஜ் இறங்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

யாருஙககு வாய்ப்பு?

யாருஙககு வாய்ப்பு?

இதே போன்று நடுவரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் ஆகியோர் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது. ஐபிஎல் தொடரில் கலக்கிய ரஜத் பட்டிதார் 6வது வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் மற்றும் ரவி பிஸ்னாய் விளையாட உள்ளனர். வேகப்பந்துவீச்சாளராக தீபக் சாஹர், முகமது சிராஜ்,ஆவேஷ் கான் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பேட்டிங்கில் குறை

பேட்டிங்கில் குறை

இந்திய அணியின் பேட்டிங் கொஞ்சம் பலவீனமாக உள்ளது. முதல் 6 வீரர்கள் தான் பேட்டிங் செய்வது போல் அணி அமைக்கப்பட்டுள்ளது. தீபக் சாஹர் 7வது வீரராக பேட்டிங் செய்வது போல் அணி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி பேட்டிங்கில் ஒரு வீரர் குறைவாக உள்ளது. இதனை சமாளிக்க ஆல்ரவுண்டர் ஷாபாஸ் அகமதை இந்தியா பயன்படுத்தலாம். மாறாக தென்னாப்பிரிக்க அணி முழு பலத்துடன் களமிறங்குவதால், இந்தியாவுக்கு கொஞ்சம் சிக்கல் தான்.

பிளேயிங் லெவன் கணிப்பு

பிளேயிங் லெவன் கணிப்பு

1, ஷிகர் தவான், 2, ருத்துராஜ் கெய்க்வாட், 3, சுப்மான் கில், 4, ஸ்ரேயாஸ் ஐயர், 5, சஞ்சு சாம்சன், 6, ரஜத் பட்டிதார்/ ராகுல் திரிபாதி. 7, தீபக் சாஹர், 8, ஷாபாஸ் அகமது / ரவி பிஸ்னாய், 9, முகமது சிராஜ, 10, ஆவேஷ் கான், 11, குல்தீப் யாதவ்

நேரலை - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் - டிஸ்னி ஹாட்ஸ்டார்

Story first published: Wednesday, October 5, 2022, 16:47 [IST]
Other articles published on Oct 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+