For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“வெங்கடேஷ் ஐயருக்கு ஏன் பவுலிங் தரவில்லை?” கே.எல்.ராகுல் முடிவின் பின் உள்ள காரணம்.. ரசிகர்கள் ஷாக்

பார்ல்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் தொடரில் வெங்கடேஷ் ஐயருக்கான வாய்ப்பு சரியாக கிடைக்கவில்லை என குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்து 296 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

முதல் போட்டி

முதல் போட்டி

தென்னாப்பிரிக்க அணியின் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை வெகு சீக்கிரமாகவே இந்திய பவுலர்கள் வீழ்த்தினர். மாலன் 6 ரன்களுக்கும், டிகாக் 27 ரன்களுக்கும் வெளியேறினர். இதன் பின்னர் வந்த மர்க்ரம் 4 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார். இதனால் அந்த அணி 68 ரன்களுக்கெல்லாம் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இங்கிருந்து தான் கே.எல்.ராகுலின் கேப்டன்சியில் குழப்பம் ஏற்பட்டது.

 இமாலய பார்ட்னர்ஷிப்

இமாலய பார்ட்னர்ஷிப்

3வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த பவுமா - வான் டர் டுசன் ஜோடி இந்திய வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இருவரும் சீரான இடைவெளியில் பவுண்டரிகளை பறக்கவிட்டதால், அவர்களின் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க ஒரு இந்திய பவுலரால் கூட முடியவில்லை. அப்போது அனைவரும் புதிய பவுலிங் தேர்வான வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு கொடுத்தால் சரியாக இருக்கும் என கணித்தனர். ஆனால் அது கடைசி வரை நிறைவேற இல்லை.

ஏமாந்த வெங்கடேஷ்

ஏமாந்த வெங்கடேஷ்

வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான வெங்கடேஷ் ஐயர், இக்கட்டான சூழல்களில் விக்கெட் எடுத்துக் கொடுக்கக் கூடியவர். ஆனால் ரன்கள் கசிந்துக்கொண்டே இருந்த போதும், கே.எல்.ராகுல் அவருக்கு வாய்ப்பு தரவில்லை. இதன் விளைவாக பவுமா மற்றும் வான் டர் டுசன் 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மேலும் இந்திய அணிக்கும் 297 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்நிலையில் கே.எல்.ராகுலின் முடிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து கணிக்கப்பட்டுள்ளது. தற்போது தான் தனது கேப்டன்சி பயணத்தை தொடங்கியுள்ள கே.எல்.ராகுல், இந்திய அணியின் வழக்கமான ஃபார்முலாவான 5 பவுலர்கள் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.

தோனியின் ஃபார்முலா

தோனியின் ஃபார்முலா

முன்னணி பவுலர்கள் தொடர்ந்து பவுலிங் வீசிக்கொண்டே இருந்தால் பேட்ஸ்மேனுக்கு அழுத்தம் அதிகமாகி விக்கெட்டுகள் விழ வாய்ப்புகள் அதிகரிக்கும். அந்த சமயத்தில் புதிய பவுலர் வீசி ரன்கள் கசிந்துவிட்டால், பேட்ஸ்மேன் அடுத்த 10 ஓவர்களுக்கு நன்கு செட்டில் ஆகிவிடுவார். இந்த எச்சரிக்கையுடன் தான் தோனியும் பெரும்பாலும் 5 பவுலர்களையே பயன்படுத்துவார்.

சஸ்பென்ஸான அட்டாக்

சஸ்பென்ஸான அட்டாக்

மற்றொரு புறம் வெங்கடேஷ் ஐயரின் பவுலிங் திறனை சஸ்பென்ஸாக வைத்திருந்தார்களா என்ற தகவல்களும் கிடைத்துள்ளது. தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டிகளாக அமையவிருக்கும் 2வது மற்றும் 3வது ஒருநாள் போட்டிகளில் திடீரென வெங்கடேஷ் ஐயரின் திறனை காட்டினால் தென்னாப்பிரிக்க பவுலர்கள் குழப்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டை இழப்பார்கள். இதன் காரணமாக வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

Story first published: Wednesday, January 19, 2022, 22:17 [IST]
Other articles published on Jan 19, 2022
English summary
Reason behind venkatesh iyer didn't get a chance to bowl in India vs south africa 1st ODI
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+