Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இந்திய வீரர்களுக்கு அடித்த லக்” தென்னாப்பிரிக்கா முக்கிய ப்ளேயர் விலகல்.. கூடிய வெற்றி வாய்ப்பு!

பார்ல்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு நிம்மதி அளிக்கும் செய்தி கிடைத்துள்ளது.

இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று பார்ல் நகரத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். டெஸ்ட் தொடரில் அடிவாங்கிய இந்திய அணி ஒருநாள் போட்டியில் பதிலடி கொடுக்க காத்துள்ளது.

முதல் 50 ஓவர் போட்டி

முதல் 50 ஓவர் போட்டி

இந்நிலையில் இந்திய அணிக்கு கூடுதல் பலம் கொடுக்கும் வகையில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ககிஸ்கோ ரபாடா 3 ஒருநாள் போட்டிகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

இலங்கை தொடர், இந்தியாவுடனான டெஸ்ட் தொடர் என ரபாடா தொடர்ந்து விளையாடி வருவதால், அவருக்கு ஓய்வு அளிக்கும் வகையில் வெளியேற்றப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் நல்ல அனுபவம் உள்ளதால், இந்திய அணி பேட்ஸ்மேன்களை பற்றி ரபாடாவிற்கு நன்கு தெரியும். டெஸ்ட் தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறியதற்கு ரபாடா முக்கிய காரணம். இப்படி இருக்கையில் அவர் விலகியிருப்பது இந்திய அணிக்கு சாதகமான சூழலை உருவாக்கும்.

மாற்று வீரர் யார்

மாற்று வீரர் யார்

தற்போதைக்கு லுங்கி எங்கிடி முன்னணி பவுலராக உள்ளார். அவருக்கு துணையாக மார்கோ ஜென்சன் செயல்படவிருக்கிறார். ரபாடாவுக்கு மாற்றாக எந்தவொரு புதிய வீரரையும் இன்னும் தென்னாப்பிரிக்க அணியில் சேர்க்கவில்லை. பயோபபுள் விதிமுறைகள் காரணமாக டெஸ்ட் தொடரில் விளையாடிய ஜார்ஜ் லிண்டே அணிக்குள் தக்கவைக்கப்பட்டுள்ளார்.

Recommended Video

IND vs SA Odi Series-ல் இருந்து South Africa-வின் முக்கிய வீரர் விலகல்
இந்தியாவுக்கு தலைவலி

இந்தியாவுக்கு தலைவலி

இந்திய அணிக்கு தலைவலி கொடுக்கும் வகையில் குயிண்டன் டிக்காக் தென்னாப்பிரிக்க அணிக்கு திரும்பியுள்ளார். இந்திய பவுலர்கள் பற்றி அவருக்கு நன்கு தெரியும் என்பதால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவரின் ரெக்கார்ட் சிறப்பாக உள்ளது. எனவே அவரை சமாளிப்பது தான் பும்ராவுக்கு சிரமமான ஒன்றாக இருக்கும்.

Story first published: Wednesday, January 19, 2022, 11:43 [IST]
Other articles published on Jan 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+