Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“சிராஜ் மீதே நம்பிக்கை இல்லை”.. ப்ளேயிங் 11ல் கடைசி நேர ட்விஸ்ட்.. இளம் வீரருக்கு அடித்த ஜாக்பாட்!

பார்ல்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11ல் கடைசி நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

மோசமாக பேசிய ரசிகர்கள்.. காப்பாற்றிய Virat Kohli.. Mohamed Siraj சொன்ன தகவல்

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று மதியம் பார்ல் நகரத்தில் தொடங்கவுள்ளது.

ஒருநாள் போட்டி தொடரையாவது வென்றுவிட்டோம் என்ற பெயருடன் நாடு திரும்ப இந்திய வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்திய ப்ளேயிங் 11

இந்திய ப்ளேயிங் 11

இதற்கான ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்வதில் இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளது. ஓப்பனிங் வீரர்களாக ராகுலுடன் சீனியர் வீரர் ஷிகர் தவான் களமிறங்கவுள்ளார். முதல் விக்கெட்டிற்கு விராட் கோலி விளையாட, 4வது வீரராக ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. அவரை தொடர்ந்து ரிஷப் பண்ட் விளையாடுகிறார்.

பவுலர்கள்

பவுலர்கள்

6வது வீரராக ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் ப்ளேயிங் 11ல் இடம்பெறவுள்ளார். கடைசி நேர அதிரடி மற்றும் வேகப்பந்துவீச்சு என ஹர்திக் பாண்ட்யாவின் பணிகளை செய்யவுள்ளார். இவருக்கு பின்னர் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய 3 முழு நேர வேகப்பந்துவீச்சாளர்கள் களமிறக்க திட்டமிடப்பட்டிருந்தது.

கடைசி நேர ட்விஸ்ட்

கடைசி நேர ட்விஸ்ட்

இந்நிலையில் பவுலிங் படையில் ட்விஸ்ட் கொடுத்துள்ளனர். வெங்கடேஷ் ஐயருடன் சேர்த்து மேலும் ஒரு ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்கூரை களமிறக்கப்படவுள்ளார். தென்னாப்பிரிக்க களத்தில் ஒருவேளை டாப் ஆர்டர் சரிந்தால் கடைசி வரை பேட்டிங் தேவை. ஷர்துல் தாக்கூர் பவுலிங்கை போலவே பேட்டிங்கில் சிறப்பாக இருப்பார் என்பதால் அவரை 4வது வேகப்பந்துவீச்சாளராக பயன்படுத்தவுள்ளனர்.

6 பவுலர்கள்

6 பவுலர்கள்

சுழற்பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் யுவேந்திர சாஹல் ஆகியோர் கம்பேக் கொடுக்கின்றனர். இதன் மூலம் 2 ஸ்பின்னர்கள் மற்றும் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் என இந்திய அணி பவுலிங் படையை உருவாக்கியுள்ளது. காயத்தில் இருந்து மீண்டு கம்பேக் கொடுக்க காத்திருந்த முகமது சிராஜுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அவரை எடுத்து ரிஸ்க் எடுக்க கே.எல்.ராகுல் விரும்பவில்லை.

ப்ளேயிங் 11 கணிப்பு

ப்ளேயிங் 11 கணிப்பு

கே.எல்.ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், ஷர்துல் தாக்கூர், அஸ்வின், புவனேஷ்வர் குமார், பும்ரா, யுவேந்திர சாஹல்

Story first published: Wednesday, January 19, 2022, 12:06 [IST]
Other articles published on Jan 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+