Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA 1st T20 - இந்தியாவின் பிளேயிங் லெவன்? குழப்பத்தில் சூர்யகுமார்.. வெற்றி வாய்ப்பு யாருக்கு

மும்பை : இந்தியா தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி இன்று இரவு இந்திய நேரப்படி ஏழு முப்பது மணிக்கு தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் ஆட்டம் டர்பன் நகரில் நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கான டிக்கெட் அனைத்தும் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டது. இந்திய அணியை பொறுத்தவரை சூரியகுமார் தலைமையில் இளம் வீரர்களே இடம்பெற்றிருக்கிறார்கள். முகேஷ் குமார், சிராஜ், ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா ஆகியோர் எல்லாம் பத்து டி20 போட்டிகளுக்கும் குறைவாகவே விளையாடி இருக்கிறார்கள்.

India vs south africa 1st t20 - india playing xi and preview in tamil

இதனால் இந்தத் தொடர் இந்த இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய அனுபவமாக அமையும். மேலும் அடுத்த டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்த தொடரை பிசிசிஐ பயன்படுத்துகிறது. இதேபோன்று தென்னாப்பிரிக்க அணியை பொறுத்தவரை பல புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் அந்த அணியுமே பலமின்றி காணப்படுகிறது.

இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் ஜடேஜா ஆகியோர் விளையாடுவார்களா இல்லையா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. நிலைமை இப்படி இருக்க இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். தொடக்க வீரராக ஜெய்ஷ்வால், கில் களமிறங்கவே வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை கில் இன்னும் வரவில்லை என்றால் ருதுராஜ் அந்த இடத்தில் விளையாடலாம். மூன்றாவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

கேப்டன் சூரியகுமார் நான்காம் இடத்தில் விளையாடுவார். ஐந்தாவது இடத்தில் ரிங்கு சிங்கும், ஆறாவது இடத்தில் விக்கெட் கீப்பராக ஜித்தேஷ் ஷர்மாவுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஏழாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜா களமிறங்கலாம். அவர் இன்னும் வரவில்லை என்றால் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

இதே போன்று தீபக் சாஹர் முகமது சிராஜ், ஆர்ஸ்தீப் சிங் ,முகேஷ் குமார் ஆகிய மூன்று வீரர்களின் மூவருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.இரண்டாவது சுழல் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவுக்கு தான் அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் நம்பர் ஒன் வீரராக தரவரிசையில் இருக்கும் ரவி பிஷ்னாய்க்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான்.

Story first published: Sunday, December 10, 2023, 13:00 [IST]
Other articles published on Dec 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+