
முன்வரிசை வீரர்கள்
தொடக்க வீரராக கேப்டன் கேஎல் ராகுல் களமிறங்குவார். ஐபிஎல் தொடரில் அவர் செம பார்மில் இருந்தார். அவருக்கு ஜோடியாக ருத்துராஜ் கெய்க்வாட் அல்லது இஷான் கிஷன் களமிறங்க வாய்ப்புள்ளது. மூன்றாவது வீரராக நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறலாம். 4வது வீரராக ஆல் ரவுண்டர் தீபக் ஹூடா விளையாட அதிக வாய்ப்புள்ளது.

நடுவரிசை வீரர்கள்
இதே போன்று 5வது வீரராக அதிரடி வீரர் ரிஷப் பண்ட் களமிறங்குவார். 6வது வீரராக நீண்ட நாட்களுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ள ஹர்திக் பாண்டியா இடம்பெறலாம். 7வது வீரராக பினிஷர் ரோலில் தினேஷ் கார்த்திக் செயல்பட அதிக வாய்ப்புள்ளது. 8வது வீரராக சுழற்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல் இடம்பெறலாம்.

பந்துவீச்சாளர்கள்
9வது வீரராக வேகப்பந்துவீச்சாளர் ஹர்சல் பட்டேலும். 10வது வீரராக புவனேஸ்வர் குமாரும், 11வது வீரராக சாஹலும் இடம்பெறலாம். இது 5 போட்டிகள் கொண்ட தொடர் என்பதால் பேட்டிங் வரிசையில் பெரிய மாற்றம் இருக்காது. ஆனால் பந்துவீச்சாளர்கள் ஆவேஷ் கான், உம்ரான் மாலிக் , ஆர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு எதாவது ஒரு போட்டியில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கலாம்.

பிளேயிங் லெவன்
1, கே.எல். ராகுல், 2, ருத்துராஜ் கெய்க்வாட், 3, ஸ்ரேயாஸ் ஐயர், 4, தீபக் ஹூடா 5, ரிஷப் பண்ட், 6, ஹர்திக் பாண்டியா, 7. தினேஷ் கார்த்திக். 8. அக்சர் பட்டேல். 9. ஹர்சல் பட்டேல். 10. புவனேஸ்வர் குமார். 11. சாஹல். இதில் தீபக் ஹூடாவுக்கு பதில் மேலும் ஒரு வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் அல்லது ஆவேஷ் கானை வைத்து இந்திய அணி களமிறங்கலாம்.


Click it and Unblock the Notifications