“சரித்திரம் படைத்த ஷமி” முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்காவை சுளுக்கெடுத்த இந்தியா- வெற்றியின் பின்னணி
செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி சரித்திர நிகழ்வை ஏற்படுத்தியுள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி முதல் செஞ்சூரியனில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இப்போட்டியில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்கள் அடிக்க, தென்னாப்பிரிக்க அணி 197 ரன்களை மட்டுமே எடுத்தது.

முதல் டெஸ்ட் போட்டி
130 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு முதல் இன்னிங்ஸில் கே.எல்.ராகுல் சதமடித்தது போல 2வது இன்னிங்ஸில் யாரும் அமையவில்லை. இதனால் 174 ரன்களுக்கு சுருண்டது. இதனையடுத்து 305 ரன்களை இலக்காக கொண்ட தென்னாப்பிரிக்க அணியால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

தடுமாறிய தென்னாப்பிரிக்கா
இந்திய அணியின் முக்கிய பவுலிங் கூட்டணியான ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோரின் கூட்டணியில் அணியின் டாப் ஆர்டர் 2வது இன்னிங்ஸிலும் அடுத்தடுத்து நடையை கட்டினர். நேற்றைய நாளின் முடிவு வரை 94 ரன்களுக்கெல்லாம் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

கடைசி நாள்
கடைசி மற்றும் 5வது நாளான இன்று தென்னாப்பிரிக்க அணி தனது கையில் உள்ள 6 விக்கெட்டுகளை வைத்து இன்னும் 211 ரன்களை சேர்க்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. அதற்கேற்றார் போலவே கேப்டன் டீன் எல்கர் மற்றும் பவுமா ஆகியோர் கூட்டணி சேர்ந்து சீராக ரன்களை உயர்த்தினர். ஆனால் 34 ரன்களுக்கும் மேல் அவர்களால் சேர்க்க முடியாமல் வெளியேறினர். இறுதியில் அந்த அணி 191 ரன்களுக்கு எல்லாம் நடையை கட்டியது இதனால் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் யார்
இந்திய அணி சார்பில் முதல் இன்னிங்ஸில் 123 விளாசிய கே.எல்.ராகுலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. பவுலிங்கை பொறுத்தவரையில் அதிகபட்சமாக முகமது ஷமி 8 விக்கெட்டுகளை சாய்த்தார். ஜஸ்பிரித் பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், முகமது ஷமி , ஷர்துல் தாக்கூர் மற்றும் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Recommended Video

புது ரெக்கார்ட்
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புதிய ரெக்கார்ட் ஒன்றையும் படைத்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியன் மைதானத்தில் இதுவரை எந்த ஆசிய நாடுகளும் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற்றதில்லை. இந்நிலையில் அந்த வரலாற்றை முதல் முறையாக மாற்றி எழுதியுள்ளது இந்திய அணி. இதுமட்டுமல்லாமல் விராட் கோலி மீதான கேப்டன்சி விமர்சனங்களுக்கும் முடிவு கட்டப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications