Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் டெஸ்ட் போட்டி ரத்தாக வாய்ப்பு.. கொரோனாவை விட பெரிதாக வந்த மற்றொரு பிரச்சினை.. ரசிகர்கள் சோகம்!

செஞ்சூரியன்: இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

India vs South Africa 1st Test போட்டிக்கு வந்த சோதனை

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 26ம் தேதியன்று செஞ்சூரியனில் தொடங்குகிறது.

தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை ஒருமுறை கூட இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை என்பதால் அதனை மாற்றி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடர் தான் என்பதால் தொடக்கம் முதலே முழு வீச்சில் செயல்பட வேண்டும். ஆனால் அதற்கு வானிலை சற்றும் ஒத்துழைக்காது என்பது போல தகவல் வெளியாகியுள்ளது. அதாவது முதல் டெஸ்ட் போட்டியின் போது பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால் குறிப்பிட்ட நாட்களுக்கு தான் மழைப்பொழிவு உள்ளது.

மழைக்கான வாய்ப்பு

மழைக்கான வாய்ப்பு

ஆட்டத்தின் முதல் இரண்டு நாட்களும் இடியுடன் கூடிய கனமழை பொழியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வுகளின் அடிப்படையில் 60% மேல் மழைப்பொழிவு இருக்கும் என்பதால் 2 நாட்கள் ஆட்டமும் ரத்து செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன. அவ்வப்போது இடைவெளி கிடைத்தாலும் பலன் இல்லை.

3ம் நாள்

3ம் நாள்

அனைவருக்கும் நிம்மதி தரும் வகையில் ஆட்டத்தின் 3ம் நாளில் மழைப்பொழிவு பெரியளவில் இருக்காது என கூறப்பட்டுள்ளது. மேகமூட்டத்துடன் இருக்கும் என்பதால் லேசான மழை தூரல்கள் பொழியலாம். ஆனால் அவை ஆட்டத்தை எந்தவகையிலும் பாதிக்காது என தெரிகிறது.

கடைசி 2 நாள்

கடைசி 2 நாள்

கடைசி 2 நாட்கள் தான் மிக முக்கியமான பகுதிகளாக இருக்கும். அப்போது மேகமூட்டத்துடன் சேர்த்து பலத்த இடிகளும் இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இடி இடிக்கும் போது, வெளிச்சம் குறைவாகவே இருக்கும் என்பதால் ஆட்டத்தை தொடர நடுவர்கள் விரும்ப மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.. இதனால் முதல் டெஸ்ட் போட்டி ஏமாற்றங்களுடன் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

Story first published: Tuesday, December 21, 2021, 17:55 [IST]
Other articles published on Dec 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+