Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 சீனியர்களுக்கு ஆப்பு.. 3வது டெஸ்டில் விராட் கோலி கொடுத்த ட்விஸ்ட்.. எதிர்பார்க்காத ப்ளேயிங் 11!

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் முக்கிய மாற்றத்துடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இன்று கேப்டவுன் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. டாஸை போன்றே வரலாற்று வெற்றி பெறவும் இந்தியா முனைப்பு காட்டி வருகிறது.

3வது டெஸ்ட் போட்டி

3வது டெஸ்ட் போட்டி

கடந்த போட்டியில் தோள்பட்டை வலி காரணமாக வெளியேறிய கேப்டன் விராட் கோலி, 3வது டெஸ்டிற்கு கம்பேக் கொடுத்துள்ளார். இதனால் பேட்டிங் வரிசை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளது. ஓப்பனிங்கில் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்குகின்றனர். சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் 2வது டெஸ்டில் அரைசதம் அடித்திருந்ததால் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சீனியர் வீரர் அதிருப்தி

சீனியர் வீரர் அதிருப்தி

மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட் நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த சில போட்டிகளாகவே ரிஷப் பண்ட் மோசமான ஷாட்களால் அவுட்டாவதால் அவருக்கு பதிலாக விருதிமான் சாஹா இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. டிராவிட்-ம் மாற்றம் செய்யலாம் என்று தான் முடிவில் இருந்ததாக தெரிகிறது. ஆனால் விராட் கோலி பண்ட் மீது நம்பிக்கை வைத்ததால் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பவுலிங் ட்விஸ்ட்

பவுலிங் ட்விஸ்ட்

இதே போல பவுலிங்கிலும் சீனியர் வீரருக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. முகமது சிராஜுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு மாற்றாக இஷாந்த் சர்மாவை களமிறக்க திட்டமிடப்பட்டிருந்தது. பவுன்ஸ் நன்றாக ஆகும் பிட்ச் என்பதால் அவரை சேர்க்க திட்டம் போடப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் உமேஷ் யாதவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் கோலியின் கேப்டன்சியில் மற்றொரு மகுடமாக அது இருக்கும். ஏனென்றால் தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியதே இல்லை. எனவே இந்த முறை அந்த ஏக்கத்தை இந்திய அணி பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

Kohli opts to bat, Umesh comes in for injured Siraj | IND vs SA 3rd Test | OneIndia Tamil
 ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி, ரகானே, ரிஷப் பண்ட், ஷர்துல் தாக்கூர், அஸ்வின், முகமது ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ்

Story first published: Tuesday, January 11, 2022, 15:01 [IST]
Other articles published on Jan 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+