
2வது ஒருநாள் போட்டி
முதல் ஒருநாள் போட்டியில் பவுலிங் சொதப்பியதால் இந்திய அணி தோல்வியடைந்தது. எனவே 2வது போட்டிக்காக முக்கிய மாற்றங்களை செய்துள்ளனர். தீபக் சஹார் காயம் காரணமாக வெளியேறியதால் அவருக்கு மாற்றாக வாஷிங்டன் சுந்தர் கொண்டு வரப்பட்டார். இதே போல சபாஷ் அகமது-ம் வாய்ப்புக்காக காத்திருந்தார். முதல் போட்டியில் ரவி பிஷ்னாய் மட்டுமே மோசமாக சொதப்பியிருந்ததால் யாரேனும் ஒருவருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

திடீர் ட்விஸ்ட்
இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் இருவருக்குமே வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதாவது ரவி பிஷ்னாய் மட்டுமின்றி இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட்-ம் ப்ளேயிங் 11ல் இருந்து நீக்கப்பட்டுள்ளார். முதல் போட்டியில் 19 ரன்களை அடித்திருந்தார். எனினும் அவருக்கு 2வது வாய்ப்பு கொடுக்க விரும்பாமல் நீக்கியுள்ளனர். மற்றபடி எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

காரணம் என்ன
கடந்த போட்டியில் இந்திய அணி 5 பவுலர்களுடன் சென்றது பிரச்சினையாக பார்க்கப்பட்டது. எனவே இந்த போட்டியில் 6 பவுலர்களுடன் களமிறங்குகிறது. அதாவது வேகப்பந்துவீச்சுக்கு முகமது சிராஜ், ஆவேஷ் கான், ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் ஸ்பின்னர்களாக வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமது, குல்தீப் யாதவ் ஆகியோரும் செயல்படுவார்கள்.

ப்ளேயிங் 11 என்ன
ஷிகர் தவான், சுப்மன் கில், இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆவேஷ் கான்


Click it and Unblock the Notifications











