IND vs SA - இந்திய அணியின் தோல்விக்கு 3 முக்கிய காரணம்.. அடித்து துவம்சம் செய்த தென்னாப்பிரிக்கா
டர்பன் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தருவதற்கு காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். தென்னாப்பிரிக்கா ஆடுகளங்களில் பேட்டிற்கு பந்து வேகமாக வரும்.
இதனால் பேட்ஸ்மேன்கள் அதிக அளவில் ரன் குவிக்க ஏதுவாக பல சூழல் இருக்கும். இந்த நிலையில் மழை இன்று முழுவதும் அவ்வப்போது குறிக்கிட்டதால் முதலில் பேட்டிங் செய்யும் அணி எந்த இலக்கை நிர்ணயித்தாலும் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு அது நன்மையாக அமையும்.

இந்த வகையில் இந்திய அணி இன்று டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்தது. இதனை அடுத்து மழை குறுக்கிட்டு ஆட்டம் 15 ஓவராக மாற்றி அமைக்கப்பட்டு இலக்கும் 152 ரன்களாக மாற்றப்பட்டது. இதன் மூலம் தென்னாப்பிரிக்க வீரர்கள் எந்த இலக்கை தொட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதிரடியாக விளையாட தொடங்கினர்.
மேலும் இந்தியா விளையாடிக் கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆடுகளம் ஈரமாக மாறியது. இதனால் பந்தை சரியான முறையில் பிடித்து வீசுவது என்பது கடினமான காரியமாக மாறிவிட்டது. இதன் காரணமாக இந்திய அணி பவுலர்கள் ஆரம்ப கட்டத்தில் தடுமாறினார்கள். இதனை பயன்படுத்திக் கொண்டு தென்னாப்பிரிக்க வீரர்கள் அதிரடி காட்டினார்கள்.
மேலும் இந்த தோல்விக்கு முக்கிய காரணம் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் டக் ஆனது தான். தென்னாப்பிரிக்கா ஆடுகளங்களில் டி20 போட்டிகளில் 200 ரன்களுக்கு மிகாமல் அடித்தால் மட்டுமே ஓரளவுக்கு தாக்குப் பிடிக்க முடியும். ஆனால் ஜெய்ஸ்வால் மற்றும் கில் டக் அவுட்டாகி வெளியேறியும் இந்திய அணி 180 ரன்கள் என்ற இலக்கு வரை வந்ததற்கு மற்ற பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டம் தான் காரணம்.
இந்த வகையில் ஜெய்ஸ்வாலும் கில்லும் கொஞ்சம் அதிரடியாக விளையாடிருந்தால் இந்திய அணி எளிதாக 200 ரன்களை கடந்து இருக்கும். இதேபோன்று ஆர்ஸ்தீப் சிங் முதல் ஓவர்லே 20 ரன்கள் விட்டுக் கொடுத்து விட்டார். இரண்டாவது ஓவரில் கொஞ்சம் முன்னேற்றம் கண்டு இருந்தாலும் திறமை வாய்ந்த இளம் வீரராக கருதப்படும் ஆர்ஸ்தீப் இவ்வளவு ரண்களை விட்டுக் கொடுத்திருப்பது நிச்சயம் தோல்விக்கு காரணமாகும் .


Click it and Unblock the Notifications