For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SA - என்னா அடி! ரிங்கு சிங் அடித்த சிக்சர்.. உடைந்த மைதான கண்ணாடி.. பேய் ஆட்டம் சார்!

டர்பன் : தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி அணியின் தலையெழுத்தையே மாற்றி விட்டார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களம் இறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் அடுத்தடுத்து டக் அவுட் ஆக திலக் வர்மா பொறுப்பாக விளையாடிய 29 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

India vs south africa 2nd t20 - Rinku Singh has broken the glass of media box with a six

சூரியகுமார் யாதவ் தன் பங்குக்கு 56 ரன்கள் சேர்த்தார். இந்த நிலையில் ரிங்கு சிங்கின் ஆட்டம் தான் இந்தியாவை மிகப்பெரிய ஸ்கோருக்கு எடுத்துச் சென்றது. ரெய்னாவின் ஜெராக்ஸ் போல் விளையாடிய ரிங்கு சிங் தென்னாப்பிரிக்கா பவுலருக்கு பந்துவீச்சை மைதானத்தில் நான்கு பக்கமும் சிதறடித்தார். கடும் நெருக்கடி ஏற்பட்ட போதும் ரிங்கு சிங் கூலாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

30 பந்துகளில் ரிங்கு சிங் அரை சதம் கடக்க கடைசி வரை ஆட்டம் இழக்காமல் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் ரிங்கு சிங் பட்டையை கிளப்பினார். ஆட்டத்தின் 19 ஆவது ஓவரை தென்னாபிரிக்க வீரர் ஏய்டன் மார்க்கரம் வீசினார். அப்போது ரிங்கு சிங் தொடர்ந்து இரண்டு சிக்சர் அடித்தார். அதில் ஒரு சிக்சர் நேரடியாக மைதானத்தில் உள்ள செய்தியாளர்கள் மாடத்தில் உள்ள கண்ணாடி மீது அடித்தது.

இதில் அந்தக் கண்ணாடி நொறுங்கியது. இந்த புகைப்படத்தை அங்குள்ள பத்திரிக்கையாளர்கள் எடுத்து தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் போட்டு இருக்கிறார்கள். ரிங்கு சிங் அடித்த பந்து நேரடியாக தங்களை தாக்க வந்ததாகவும் கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து இருக்க வேண்டியது. ஆனால் எங்கள் மீது படவில்லை என்று கூறுகிறார்கள்.

மேலும் ரிங்கு சிங்கின் ஆட்டம் மிகவும் ஸ்பெஷலானது என்றும் வேற லெவலில் இருப்பதாகவும் அவர்கள் பாராட்டு இருக்கிறார்கள். ரிங்கு சிங் இன் ஆட்டத்தை ரசிகர்களும் பெரும் அளவில் பாராட்டு வருகிறார்கள். தென்னாப்பிரிக்கா மண்ணில் முதல் முறையாக விளையாடும் ரிங்கு சிங் தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார்.

Story first published: Tuesday, December 12, 2023, 22:52 [IST]
Other articles published on Dec 12, 2023
English summary
India vs south africa 2nd t20 - Rinku singh hits six landed on the media box glass IND vs SA - என்னா அடி! ரிங்கு சிங் அடித்த சிக்சர்.. உடைந்த மைதான கண்ணாடி.. பேய் ஆட்டம் சார்!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+