For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிராஜ், ஆர்ஸ்தீப்பை பொளந்த தென்னாப்பிரிக்கா.. 3.4 ஓவரில் எல்லாம் 50 ரன்களை கடந்த தென்னாப்பிரிக்கா

டர்பன் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சு மிகவும் மோசமான வகையில் இருந்தது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது நமது செய்தித் தளத்தில் பௌலர்கள் அனுபவம் வாய்ந்த வீரராக இல்லை.

இதனால் இந்தியா அடி வாங்க போவது உறுதி என்று செய்தி வெளியிட்டு இருந்தோம். அந்த வகையில் இந்திய அணி பெரிய இலக்கை நிர்ணயித்தும் பவுலர்களால் இந்தியா அடி வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

India vs south africa 2nd t20 - worst bowling by siraj and arshdeep made SA to cross 50 in 22 balls

பேட்ஸ்மேன்கள் அதிக அளவில் நாம் தயாரித்து வைத்திருந்தாலும் ரன்களை கட்டுப்படுத்தும் அளவுக்கு பவுலர்களை நாம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. குறிப்பாக ஆர்ஸ்தீப் சிங், முகேஷ் குமார், சிராஜ் ஆகிய பவுலர்களை நம்பி களமிறங்குவது நமக்கு நாமே வேட்டு வைத்துக் கொள்வதற்கு சமம். ஏனென்றால் தென்னாப்பிரிக்க ஆடுகளத்தில் பேட்டிற்கு பந்து வேகமாக வரும்.

இதனை அந்நாட்டு வீரர்கள் விரும்புவார்கள். அதற்கு ஏற்ப பவுலர்கள் அல்வா சாப்பிடுவது போல் பந்து வீச அதனை தென்னாபிரிக்க பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகளுக்கு விரட்டினார்கள். முகமது சிராஜ் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவ்வளவு விளையாடியும் தன்னுடைய முதல் ஓவரில் மூன்று பவுண்டர்களை கொடுத்து 14 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

இதேபோன்று இந்தியா பெரிதும் நம்பி இருந்த ஆர்ஸ்தீப் சிங் முதல் ஓவரிலே இரண்டு சிக்சர் ஒரு பவுண்டரி என 24 ரன்களை விட்டுக் கொடுத்து நல்ல தொடக்கத்தை காட்டினார். இதேபோன்று மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான முகேஷ் குமார் மூன்று ஹாட்ரிக் பவுண்டரிகளை விட்டுக் கொடுத்து 13 ரன்களை கொடுத்தார்.

இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி மூன்று புள்ளி நான்கு ஓவர்கள் எல்லாம் 50 ரன்களைக் கடந்து பட்டையை கிளப்பி வருகின்றனர்.
முகமது சமி, பும்ரா போன்ற வீரர்கள் இல்லாத நிலையில் டி20 உலக கோப்பையில் இந்தியா என்ன பாடுபட போகிறது என்பது குறித்து நினைக்கையில் இப்போதே வயிற்றில் லேசாக கலக்குகிறது.

Story first published: Wednesday, December 13, 2023, 0:08 [IST]
Other articles published on Dec 13, 2023
English summary
India vs south africa 2nd t20 - worst bowling by siraj and arshdeep made SA to cross 50 in 22 balls சிராஜ், ஆர்ஸ்தீப்பை பொளந்த தென்னாப்பிரிக்கா.. 3.4 ஓவரில் எல்லாம் 50 ரன்களை கடந்த தென்னாப்பிரிக்கா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+