
முதல் இன்னிங்ஸ்
ஓப்பனிங்கில் கேப்டன் கே.எல்.ராகுல் மட்டும் அரைசதம் அடிக்க மற்ற எந்த பேட்ஸ்மேனும் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. புஜாரா 3, ரகானே டக் அவுட், ஹனுமா விஹாரி 22, ரிஷப் பண்ட் 17 என அனைவரும் வந்தவேகத்தில் வெளியேறியதால் இந்திய அணி 116 ரன்களுக்கு எல்லாம் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

காப்பாற்றிய அஸ்வின்
அப்போது களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின், முழு நேர பேட்ஸ்மேனே அடிக்க திணறிய பிட்ச்-ல் பவுண்டரி மழை பொழிந்தார். தென்னாப்பிரிக்காவின் முன்னணி பவுலர்களை அவர் பொழக்க இது டெஸ்ட் போட்டியா அல்லது டி20 போட்டியா என ரசிகர்கள் குழம்பினர். வெறும் 50 பந்துகளில் 46 பந்துகளை சந்தித்த அஸ்வின் 46 ரன்களை விளாசினார். அவரின் உதவியால் இந்திய அணி முதல் இன்னின்ங்ஸில் 202 ரன்கள் எடுத்தது.

எல்கரின் விமர்சனம்
இந்நிலையில் தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கரின் நக்கலுக்கு அஸ்வின் பதிலடி கொடுத்ததாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்னர் டின் எல்கர் கொடுத்த பேட்டியில், அஸ்வினின் பவுலிங் தென்னாப்பிரிக்காவில் எடுபடாது. இந்தியாவில் அவர் சிறப்பாக செயல்பட்டதை வைத்து, தென்னாப்பிரிக்காவில் சிறப்பாக பந்துவீசுவார் என்று கருதக் கூடாது. அஸ்வின் சிறந்த ஸ்பின்னர்தான். ஆனால் இங்கு அவரால் ஒன்னுமே செய்ய முடியாது எனக்கூறினார்.
Recommended Video

அஸ்வினின் பதிலடி
பவுலிங்கில் தான் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது எனக்கூறினாய், பேட்டிங்கில் என்ன செய்ய முடியும் என காட்டுகிறேன் என்பது போல ஒவ்வொரு பந்தையும் சொல்லி சொல்லி அடித்துள்ளார். இப்படிபட்ட பேட்ஸ்மேனை தான் இந்திய அணி இவ்வளவு நாட்களாக பேட்டிங்கிற்கு உதவ மாட்டார் என ஒதுக்கி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











