Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வினின் ஒன் மேன் ஷோ.. ப்ளேயிங் 11 ட்விஸ்ட்.. பல்வேறு சுவாரஸ்யங்களுடன் முடிந்த முதல் நாள் ஆட்டம்!

ஜேசன்பெர்க்: 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் இன்னிங்ஸ், பல்வேறு சுவாரஸ்யங்கள், ட்விஸ்ட்களுடன் முடிந்துள்ளது.

இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

கேப்டன் விராட் கோலி தோள்பட்டை காயத்தால் பாதிக்கப்பட்டிருந்ததால் கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டார்.

 2வது டெஸ்ட்

2வது டெஸ்ட்

முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஓப்பனிங் ஜோடியான கேப்டன் கே.எல்.ராகுல் - மயங்க் அகர்வால் நிதானமாக ரன்களை சேர்த்தனர். எனினும் அந்த ஜோடியால் நீண்ட நேரம் நிலைக்க முடியவில்லை. மயங்க் அகர்வால் 26 ரன்களுக்கு நடையை கட்டினார்.

மீண்டும் சொதப்பல்

மீண்டும் சொதப்பல்

இதன் பின்னர் களமிறங்கிய சீனியர் வீரர்களான சட்டீஸ்வர் புஜாரா 33 பந்துகளை சந்தித்து வெறும் 3 ரன்களுக்கு நடையை அவுட்டானார். ரகானே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் இந்திய அணி 49 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. மீண்டும் ஒருமுறை சொதப்பியதால் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

பொறுப்பான ஆட்டம்

பொறுப்பான ஆட்டம்

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேற மறுமுணையில் தூணை போன்று நிலைத்து நின்று ஆடிய கே.எல்.ராகுல் 50 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.

இதனால் இந்திய அணி 116 ரன்களுக்கு எல்லாம் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. 5வது விக்கெட்டிற்கு களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் சர்ஃபரைஸ் கொடுத்தார். 50 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரிகளுடன் 46 ரன்களை சேர்த்து அதிரடி காட்டினார். இதன் பின்னர் டெயில் எண்டர்கள் ஓரளவிற்கு ரன்களை சேர்க்கஇந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Recommended Video

Day 1ல் காப்பாற்றிய Ashwin, Rahul! 1st Inningsல் India 202 Runs | IND vs SA | OneIndia Tamil
தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா

குறைவான ஸ்கோரில் இந்திய அணியை சுருட்டிய நம்பிக்கையில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி கொடுத்தார் முகமது ஷமி. அவரின் ஓவரில் ஏய்டன் அக்ரம் 7 ரன்களுக்கு நடையை கட்டினார். இதனால் முதல் நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 35 ரன்களுக்கு ஒருவிக்கெட்டை இழந்து ஆடி வருகிறது.

Story first published: Monday, January 3, 2022, 21:46 [IST]
Other articles published on Jan 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+