Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அஸ்வினின் ஒன் மேன் ஷோ”.. பெரும் சரிவில் இருந்து மீண்ட இந்திய அணி.. முதல் இன்னிங்ஸில் சுவாரஸ்யம்!

ஜேசன்பெர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் டாப் ஆர்டர் சொதப்பிய போதும் அஸ்வினின் அதிரடியால் நல்ல நிலைமையில் இந்திய அணி உள்ளது.

இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி வாண்டரர்ஸ் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. விராட் கோலிக்கு காய பாதிப்பு இருந்ததால் கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டார்.

2வது டெஸ்ட்

2வது டெஸ்ட்

ஓப்பனிங் ஜோடியாக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல் - மயங்க் அகர்வால் ஜோடி நிதானமாக ரன்களை சேர்த்தனர். ஆனால் முதல் டெஸ்டை போல அந்த ஜோடியால் நீண்ட நேரம் நிலைக்க முடியவில்லை. மயங்க் அகர்வால் 26 ரன்களுக்கு நடையை கட்டினார். இதன் பின்னர் தான் இந்திய அணியின் சரிவு தொடங்கியது.

மீண்டும் சொதப்பல்

மீண்டும் சொதப்பல்

அணியை வழிநடத்த வேண்டிய சீனியர் வீரர்களான சட்டீஸ்வர் புஜாரா 33 பந்துகளை சந்தித்து வெறும் 3 ரன்களுக்கு நடையை கட்டினார். இதன் பின்னர் வந்த ரகானே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் இந்திய அணி 49 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. வாழ்வா சாவா போட்டியில் கூட இவர்கள் சரியாக விளையாடவில்லை என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

பொறுப்பான ஆட்டம்

பொறுப்பான ஆட்டம்

இதன் பின்னர் வந்த ஹனுமா விஹாரி தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள சீரான வேகத்தில் ரன்னை உயர்த்தினார். ஆனால் அவர் 20 ரன்கள் அடித்திருந்த போது வான் டர் டஸனின் சூப்பர் கேட்சால் வெளியேறினார். ஒரு முனையில் விக்கெட்கள் சரிய மறுமுணையில் தூணை போன்று நிலைத்து நின்று ஆடிய கே.எல்.ராகுல் 50 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.

Recommended Video

Day 1ல் காப்பாற்றிய Ashwin, Rahul! 1st Inningsல் India 202 Runs | IND vs SA | OneIndia Tamil
காப்பாற்றிய ரவி அஸ்வின்

காப்பாற்றிய ரவி அஸ்வின்

இந்திய அணி 116 ரன்களுக்கு எல்லாம் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியதால் ரசிகர்கள் பதறினர். ஆனால் அப்போது களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் பவுண்டரிகளை பறக்கவிட்டு அதிரடி காட்டினார். 50 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரிகளுடன் 46 ரன்களை சேர்த்து அசத்தினார். டெயில் எண்டர்கள் தங்களால் முடிந்தவரை ரன்களை சேர்க்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Story first published: Monday, January 3, 2022, 20:35 [IST]
Other articles published on Jan 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+