Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பரபரப்பு கட்டத்தில் 2வது டெஸ்ட்: இந்திய வெற்றிக்கு 287 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா

செஞ்சுரியன்: இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற 287 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது தென் ஆப்பிரிக்கா.

3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில், செஞ்சுரியனில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 335 ரன்களும், இந்தியா, 307 ரன்களும் எடுத்தன.

India Vs South Africa, 2nd Test, Day 4: Hosts set a target of 287 for visitors to win

2வது இன்னிங்சில் இன்றைய 4வது நாள் ஆட்டத்தின் பாதியில், தென் ஆப்பிரிக்கா 258 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இந்திய தரப்பில் முகமது ஷமி 4, பும்ரா 3, இஷாந்த் ஷர்மா 2, அஸ்வின் 1 விக்கெட்டை வீழ்த்தினர். டிவில்லியர்ஸ் அதிகபட்சமாக 80 ரன்களை விளாசினார்.

இதையடுத்து, இந்திய அணி வெற்றி பெற 287 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாளை டெஸ்ட் போட்டியின் 5வது நாள் என்பதால் டிரா செய்வதற்கான வாய்ப்பு குறைவு. இரண்டில் ஒரு அணி வெற்றி பெறுவதற்கே வாய்ப்பு அதிகம். எனவே போட்டி விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது.

Story first published: Tuesday, January 16, 2018, 19:50 [IST]
Other articles published on Jan 16, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+