Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடப்போங்கையா..!! வெறுப்பில் சுற்றிய மைதான ஊழியர்கள்.. 4வது நாள் ஆட்டத்தின் முடிவு என்ன?

ஜோஹன்ஸ்பெர்க் நகரத்தில் விட்டு விட்டு பெய்த மழையின் காரணமாக இந்தியா - தென்னாப்பிரிக்க இடையேயான 2வது டெஸ்ட் போட்டி பாதிப்படைந்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி இறுதிகட்டத்தை எட்டி வந்த சூழலில் திடீரென மழைக்குறுக்கிட்டுள்ளது.

இந்திய அணி நிர்ணயித்த 240 ரன்கள் இலக்கில் தென்னாப்பிரிக்க அணி 118 ரன்களை எட்டிவிட்டது. வெற்றி பெற இன்னும் 122 ரன்கள் தேவை என்ற நிலையில் இன்று மழைக்குறுக்கிட்டது.

 மழைக்குறுக்கீடு

மழைக்குறுக்கீடு

போட்டி நடைபெறும் ஜோஹன்ஸ்பெர்க் நகரத்தில் இன்று காலை முதலே அதிகப்படியான மழைப்பொழிவு இருந்தது. இதனால் ஆட்டம் ஒரு ஓவர் கூட வீசப்படாமல் தாமதமானது. மதிய நேரத்தில் ஓரளவிற்கு மழைப்பொழிவு நின்ற போது, ஆட்டம் தொடங்குவதாக இருந்தது. எனினும் சிறிது நேரத்திலேயே மழைப்பொழிவு தொடங்கியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

முழுவது ரத்தா

முழுவது ரத்தா

ஒவ்வொரு மணி நேர இடைவெளியில் கள நடுவர்கள் வானிலை குறித்து ஆய்வு நடத்தினர். எனினும் முடிவு கிடைக்கவில்லை. மைதான ஊழியர்கள் மழை நின்றுவிட்டது என கவர்களை எடுத்த சில நிமிடங்களில் மீண்டும் மழைப்பொழிவு தொடங்கியது. ஆனால் இன்று மழை நிற்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதால், இன்றைய ஆட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரன் அடிப்பதில் சிக்கல்

ரன் அடிப்பதில் சிக்கல்

ஒருவேளை இன்றைய நாள் ஆட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டால், இந்திய அணிக்கு தான் அது சாதகமான ஒன்றாக மாறும். ஏனென்றால் 2 நாட்களில் 122 ரன்கள் அடிப்பது தென்னாப்பிரிக்க அணிக்கு எளிதான ஒன்று தான். நிதானமாக ரன்களை சேர்த்துவிடும். ஆனால் மழைபாதிப்புக்கு பின்பு இந்த ஸ்கோரை அடிப்பது சாதாரணம் அல்ல.

 என்ன காரணம்

என்ன காரணம்

மழைப்பொழிவுக்கு பின்னர் பிட்ச்-ல் அதிகப்படியான ஈரப்பதம் இருக்கும். இதில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நல்ல ஸ்விங் ஆகும் என்பதால் பேட்ஸ்மேன்கள் சிரமப்படுவார்கள். அதுவும் கடைசி நாளன்று அவர்கள் சேஸ் செய்வது அதிக அழுத்தமான ஒன்றாக இருக்கும்.

இதற்கு முன்னர் எப்போது?

இதற்கு முன்னர் எப்போது?

ஏற்கனவே இதே போன்ற நிலைமை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போது ஏற்பட்டது. இந்தியா - நியூசிலாந்து இரு அணிகளும் சம பலத்துடன் இருந்த சூழலில் மழைக்குறுக்கிட்டது. இதனால் இந்திய அணி பேட்டிங் செய்யும் போது அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். எனவே தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு அந்த நிலைமை ஏற்படலாம் எனத்தெரிகிறது.

Story first published: Thursday, January 6, 2022, 19:05 [IST]
Other articles published on Jan 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+