For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“பிசிசிஐ-ன் நாடகம் அம்பலம்?”.. சீனியர் வீரர்களை காப்பாற்ற கூறப்படும் பொய்கள்.. ரசிகர்கள் கொந்தளிப்பு

ஜோசன்பெர்க்: இந்திய அணி வீரர்கள் தேர்வு விவகாரத்தில் பிசிசிஐ நாடகமாடி வருவதாக ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

Recommended Video

வீரர்களை புறக்கணிக்க BCCI பயன்படுத்தும் யுக்தி.. கொந்தளிக்கும் ரசிகர்கள்

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியின் ப்ளேயிங் 11ல் தான் பெரும் சர்ச்சை தற்போது கிளம்பியுள்ளது.

மீண்டும் ஏமாற்றம்

மீண்டும் ஏமாற்றம்

திடீரென இந்த போட்டியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக ஹனுமா விஹாரி களமிறக்கப்பட்டார். எனினும் வாய்ப்புகாக காத்திருந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. புஜாராவுக்கு பதிலாக ஸ்ரேயாஸை ஏன் களமிறக்கவில்லை என்ற கேள்வி சமூக வலைதளம் முழுக்க எழுப்பப்பட்டது.

பிசிசிஐ-ன் விளக்கம்

பிசிசிஐ-ன் விளக்கம்

ஆனால் இதற்கு சாதூர்யமாக பதிலளித்திருந்த பிசிசிஐ, ஸ்ரேயாஸுக்கு வயிற்று பிரச்சினை எனவும், இதனால் 2வது டெஸ்டில் விளையாட முடியவில்லை என்றும் தெரிவித்தது. இதில் தான் பிசிசிஐ நாடகமாடுகிறதா என பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். நேற்று இரவு வரை ஸ்ரேயாஸ் ஐயர் பயிற்சி மேற்கொண்டு முழு உடல் ஆரோக்கியத்தோடு இருந்துள்ளார்.

திடீர் வயிற்று வலி

திடீர் வயிற்று வலி

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கூட சக வீரர்களுடன் சேர்ந்து நடனமாடிவிட்டு, உற்சாகத்துடன் இருந்து வந்துள்ளார். ஆனால் திடீரென இன்று காலை போட்டி தொடங்குவதற்கு வயிற்று பிரச்சினை என காரணம் கூறப்படுகிறது.

 நாடகமா?

நாடகமா?

இவ்வாறான காரணங்கள் சமீக காலமாக பிசிசிஐயால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் திடீரென ரகானே வெளியேற்றப்பட்டார். அவருக்கு காயம் ஏற்பட்டதால் வெளியேற்றப்பட்டதாக கடைசி நிமிடத்தில் அறிவிக்கப்பட்டது. எனவே வீரர்களை வெளியேற்றுவதற்காக காயம் என்ற சொல்லை பிசிசிஐ கூறி நாடகமாடி வருவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஆதரவுகள்

ஆதரவுகள்

ஸ்ரேயாஸுக்கு பதிலாக இந்த முறையும் வாய்ப்பு பெற்ற சட்டீஸ்வர் புஜாரா 3 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். அவரின் டெஸ்ட் பயணத்தில் இது வாழ்வா? சாவா? போட்டி என தெரிந்தும் அவர் மீண்டும் சொதப்பி வெளியேறியுள்ளதால் ஸ்ரேயாஸுக்காக ரசிகர்கள் ஆதரவுக் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

Story first published: Monday, January 3, 2022, 19:56 [IST]
Other articles published on Jan 3, 2022
English summary
Is BCCI misleading the media and fans, on Selection process, fans raising question on excluding shreyas iyer in India vs South africa 2nd test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+