“ஐயோ.. இவ்வளவு மோசமா?” இந்தியா -தென்னாப்பிரிக்க 2வது டெஸ்ட்.. அடுத்தடுத்து ட்விஸ்ட் கொடுத்த வானிலை!
ஜோசன்பர்க்: இந்தியா தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி முற்றிலும் ரத்து செய்யப்படலாம் எனத்தெரிகிறது.
இரு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.
முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு நாள் ஆட்டம் முழுவதும் மழையினால் பாதிக்கப்பட்ட போதும் இந்திய அணி 4 நாட்களில் வெற்றியை ருசித்தது. ஆனால் 2வது போட்டியில் அதற்கு வாய்ப்பு இருக்காது.

வானிலை
போட்டி நடைபெறும் ஜோசன்பர்க் நகரின் வானிலை மிகவும் மோசமாக மாறியுள்ளது. கடும் மழைப்பொழிவு ஒருக்கும் என்பதால் இந்திய அணி இன்று மற்றும் நாளை மேற்கொள்ளவிருந்த பயிற்சிகளும் முற்றிலுமாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

முதல் நாள்
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமை நாட்களில் இரவு விடிய விடிய கனமழை இருக்கும் என்பதால் ஆட்டத்தின் முதல் நாளான ஜனவரி 3ம் தேதி போட்டி தாமதாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அன்றை நாளின் மதியத்தில் 70 % அளவிற்கு மழைக்கான வாய்ப்புகள் இருப்பதால் உணவு இடைவெளிக்கு பிறகு ஆட்டம் ரத்தாகலாம்.

2வது நாள் ஆட்டம்
முதல் நாள் ஆட்டம் ஆவது பாதி வரை நடைபெறும் எனக்கூறப்பட்ட நிலையில் 2வது நாள் ஆட்டம் முற்றிலும் ரத்து செய்யப்படலாம். ஏனென்றால் அன்றை தினத்தில் 80 சதவீதம் அளவிற்கு மழைக்கான வாய்ப்புகள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றை தினத்தின் ஆட்டத்தை பாதிக்கலாம்

3வது நாள்
3வது நாள் ஆட்டம் முழுவதுமாக நடைபெறலாம். முந்தைய நாள் இரவில் மழைப்பொழிவு இருக்காது என்பதால் சரியான நேரத்திலேயே ஆட்டம் தொடங்கும். எனினும் 40 சதவீதம் அளவிற்கு மழை வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடைசி நாட்கள்
4ம் நாள் ஆட்டமும் இரு அணிகளுக்கும் மோசமாகவே அமைந்துள்ளது. அன்றைய நாள் முழுவதுமே மழைக்கான வாய்ப்புகள் இருக்கும். எனினும் 5வது நாள் ஆட்டத்தில் சில மணி நேரங்கள் மட்டும் போட்டி நடைபெறுவதை ரசிகர்கள் பார்க்கலாம். இதனால் இந்த போட்டியில் எப்படியும் முடிவு எட்டப்படாது எனத்தெரிகிறது.


Click it and Unblock the Notifications