
சறுக்கிய இந்திய அணி
முதல் டெஸ்டில் நடந்ததை போலவே தென்னாப்பிரிக்க அணியை இந்த முறையும் குறைந்த ஸ்கோருக்குள் சுருட்டிவிடலாம் என நினைத்த இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 2வது நாள் தொடக்கத்தில் 35 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த அந்த அணிக்கு மிகவும் வலுவான பார்ட்னர்ஷிப்பை கொடுத்தனர் கேப்டன் டின் எல்கர் - கீகன் பீட்டர்சன் ஜோடி.

தலைவலி தந்த பார்ட்னர்ஷிப்
2ம் நாள் ஆட்டம் தொடங்கியது முதல் அவர்களின் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் இந்திய அணி தடுமாறி வந்தது. அதுவும் குறிப்பாக சீனியர் பவுலர்களான முகமது ஷமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் எந்த பதற்றமும் அடையாத எல்கர் ஜோடி நிதானமாக 50 ரன்களுக்கும் மேலாக பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி வந்தனர்.

ஷர்துலின் ஸ்கெட்ச்
இந்நிலையில் செட்டிலான பேட்ஸ்மேன்களை அவுட்டாக்க இளம் வீரர் ஷர்துல் தாக்கூர் கொண்டு வரப்பட்டார். இன்று ஷர்துல் வீசிய முதல் ஓவரிலேயே செட்டில் பேட்ஸ்மேனாக இருந்த கேப்டன் டீன் எல்கரை அசால்டாக தூக்கினார். 120 பந்துகளை சந்தித்து வெறும் 28 ரன்களை சேர்த்த எல்கரை அடித்து ஆட வைக்க அவுட்சைட் ஆஃப் திசையில் அழகான டெலிவரி ஒன்றை போட்டார். அதில் கட்சிதமாக சிக்கினார்.

செட்டில் பேட்ஸ்மேன்
vஎல்கர் சென்ற பின்னரும் கூட மறுமுணையில் நின்றிருந்த கீகன் பீட்டர்சன் அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடி வந்தார். எந்த பந்தை போட்டாலும் லாவகமாக செயல்பட்டு வந்த பீட்டர்சனை, சற்று இரங்கி வந்து ஆட நினைத்த ஷர்துல், வைட் திசையில் ஒரு பந்தை போட்டு எட்ஜ் கேட்ச் ஆக்கினார். இதனால் 62 ரன்கள் எடுத்த மற்றொரு செட்டில் பேட்ஸ்மேனாக இருந்த கீகன் பீட்டர்சனை வெளியேற்றினார்.
Recommended Video

ரசிகர்கள் பாராட்டு
நன்கு செட்டில் ஆன பேட்ஸ்மேன்களை உணர்ச்சிவசப்பட வைத்து அவுட்டாக்குவதில் தான் ஷர்துல் தாக்கூர் ஸ்பெஷலிஸ்டாக உள்ளார். இதற்கு முன்னர் சில டெஸ்ட்களிலும் இதையே தான் செய்துள்ளார். அவரின் பவுலிங்கிலால் இந்தியா 2வது டெஸ்டில் கம்பேக் கொடுத்துள்ளது. மேலும் "லார்ட்" ஷர்துல் என்று ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











