Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“கவனம் தேவை தம்பி” 2வது டெஸ்டில் இந்தியாவுக்கு இருக்கும் சவால்.. அதிர்ச்சி தரும் பிட்ச் ரிப்போர்ட்!

ஜோசன்பர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி நடைபெறும் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அடுத்ததாக வரும் 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால் பெரும் உலக சாதனையுடன் தொடரை கைப்பற்றும்.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இந்த டெஸ்ட் போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுவிட்டால் தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும். இதே போல சேனா ( SENA ) நாடுகள் என்றழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் டெஸ்ட் தொடரை வென்ற ஆசியாவின் முதல் அணி என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும்.

பிட்ச்-ன் ரிப்போர்ட்

பிட்ச்-ன் ரிப்போர்ட்

இப்படி மிக முக்கியமாக பார்க்கப்படும் இந்த போட்டி ஜோசன்பர்க்கில் உள்ள வாண்டெரர்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தை பொறுத்தவரையில் செஞ்சூரியன் மைதானத்தை போன்றே பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிற்குமே சாதகமான ஒன்றாக இருக்கக்கூடும்.

கவனம் தேவை

கவனம் தேவை

பேட்டிங்கிற்கு வரும் வீரர்கள் முதல் 10 - 15 ஓவர்களுக்கு இங்கு நிதானமாக நின்று விளையாட வேண்டும். ஏனென்றால் பிட்ச்-ன் தன்மையை பொறுமையாக உணர்வோரால் மட்டுமே இங்கு பெரிய ஸ்கோர் அடிக்க முடியும். பவர் ஹிட்டர்ஸுக்கு இங்கு நேரம் சரியில்லாமல் தான் போகும் என்று கூறலாம். ஆனால் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு இங்கு நல்ல அனுபவம் உள்ளதால் அவர்களுக்கு கூடுதல் பலம்.

பவுலிங் எப்படி

பவுலிங் எப்படி

இந்த பிட்ச்-ல் வேகப்பந்துவீச்சாளர்கள் தான் பெரிய கவனத்தை ஈர்க்கலாம். பிட்ச்-ல் புற்கள் அதிகமாக இருக்கும் என்பதால் அதிகப்படியான பவுன்சர்களை இங்கு பார்க்கலாம். இதே போல மழைக்கான வாய்ப்புகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளதால் ஸ்விங்கும் பெரியளவில் இருக்கும்.

வெற்றி யாருக்கு

வெற்றி யாருக்கு

மிகவும் கடினமானதாக பார்க்கப்பட்ட செஞ்சூரியன் மைதானத்திலேயே இந்திய அணி முழு ஆதிக்கத்துடன் வெற்றியை பெற்றது. எனவே இந்த மைதானத்திலும் அதே பலத்தை காட்டும் என்பதால் நிச்சயம் வெற்றி உறுதியாகும்.

Story first published: Saturday, January 1, 2022, 19:04 [IST]
Other articles published on Jan 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+