“பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு”.. ரகானே - புஜாராவால் கொந்தளித்த ராகுல் டிராவிட்.. அவசர மீட்டிங் ரெடி!
ஜோசன்பெர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கடும் கோபம் அடைந்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி 50 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து மோசமாக திணறி வருகிறது.

டிராவிட் எதிர்ப்பு
இந்த போட்டியில் ப்ளேயிங் 11ல் பெரும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டது. வழக்கமாக சொதப்பும் சீனியர் வீரர்கள் அஜிங்கியா ரகானே, புஜாரா ஆகியோரை நீக்கிவிட்டு வாய்ப்புகாக காத்திருக்கும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. குறிப்பாக புஜாரா கடந்த முதல் டெஸ்டில் டக் அவுட்டாகி வெளியேறினார்.

அதீத நம்பிக்கை
எனினும் அவர்கள் மீது முழு நம்பிக்கை வைத்திருந்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 2வது டெஸ்ட் போட்டியில் மீண்டும் வாய்ப்பு கொடுத்தார். தேர்வுக்குழுவின் எதிர்பையும் மீறி சண்டை போட்டு டிராவிட் அவர்களை அணிக்குள் கொண்டு வந்தார். ஆனால் அதற்கெல்லாம் மீண்டும் ஒருமுறை அவர்கள் ஏமாற்றியுள்ளனர்.

மீண்டும் ஏமாற்றம்
2வது டெஸ்டில் விராட் கோலி இல்லாததால், ரகானே, புஜாரா தான் பொறுப்பாக ஆட வேண்டிய சூழல் இழந்தது. ஆனால் சட்டீஸ்வர் புஜாரா 3 ரன்களுக்கும், அஜிங்கியா ரகானே டக் அவுட்டாகியும் அடுத்தடுத்து நடையை கட்டினர். இதனால் இந்திய அணி 50 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. ரசிகர்கள் மட்டுமின்றி ராகுல் டிராவிட்டும் கடும் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது.
Recommended Video

அவசர மீட்டிங்?
இதனையடுத்து அவர்கள் இருவருக்கும் அவசர அவசரமாக ராகுல் டிராவிட் மீட்டிங் போட்டுள்ளதாகவும், அதில் விட்டு விளாச இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.கடந்த முறையே புஜாரா டக் அவுட்டான போது, டிராவிட் அதிருப்தி தெரிவித்த விதம் அனைவராலும் கவனிக்கப்பட்டது. இந்த முறை அவரை மேலும் சூடாக்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications