புஜாரா - ரகானே அதிரடி அரைசதம்.. பவுண்டரி பறக்கவிட்டு அசத்தல் கம்பேக்..சரிவில் இருந்து மீண்ட இந்தியா
ஜோகன்ஸ்பெர்க்: நீண்ட நாட்களாக விமர்சனத்திற்கு உள்ளான சட்டீஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரகானே ஆகியோர் அதிரடி அரைசதம் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் புஜாரா மற்றும் ரகானே ஆகியோருக்கு இக்கட்டான சூழல் உருவாகியிருந்தது.
ஒவ்வொரு போட்டியிலும் தொடர்ந்து சொதப்பிய அவர்களுக்கு இந்த போட்டி தான் வாழ்வா? சாவா? ஆட்டமாக உள்ளது.

கவாஸ்கர் விட்ட எச்சரிக்கை
இதுகுறித்து பேசியிருந்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் புஜாரா- ரகானே ஆகியோர் 2வது இன்னிங்ஸில் எப்படியாவது சிறப்பாக ஆட வேண்டும். இல்லையென்றால் இதுதான் அவர்களின் கடைசி டெஸ்டாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் அதனை புரிந்துக்கொண்டு சட்டீஸ்வர் புஜாரா அதிரடி கம்பேக் கொடுத்துள்ளார்.

பிரஷரில் சீனியர் வீரர்கள்
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 202 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்கா 229 ரன்கள் சேர்த்து 27 ரன்கள் முன்னிலை பெற்றது. எனவே 2வது இன்னிங்ஸில் 400+ ரன்கள் இலக்கு நிர்ணயித்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற சூழலில் இந்தியா இருந்த போது கேப்டன் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். இதனால் ஒட்டுமொத்த பிரஷரும் புஜாரா மற்றும் ரகானேவின் மேல் விழுந்தது.

அரைசதம்
தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாடிய சட்டீஸ்வர் புஜாரா பந்தை வீணாக்காமல் டி20 கிரிக்கெட்டை போன்று அதிரடி காட்டி விளையாடினார். 62 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரிகளுடன் அரைசதம் விளாசினார். மறுமுனையில் நின்ற ரகானே 67 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 52 ரன்களை அடித்து அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

குவிந்த விமர்சனங்கள்
"அவர்கள் அவ்வளவு தான், ஃபார்ம் அவுட், அணியில் இருந்து வெளியேற்றுங்கள்" எனக்கூறிய விமர்சகர்களுக்கு அடுத்தடுத்த பவுண்டரிகள் மூலம் பதிலடி கொடுத்துள்ளனர் புஜாரா - ரகானே. இதனால் அடுத்த போட்டியில் இவர்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழாது எனத் தெரிகிறது. தொடர்ந்து இதே போன்று விளையாடினால் சதமடிப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது. "அவர்கள் அவ்வளவு தான், ஃபார்ம் அவுட், அணியில் இருந்து வெளியேற்றுங்கள்" எனக்கூறிய விமர்சகர்களுக்கு அடுத்தடுத்த பவுண்டரிகள் மூலம் பதிலடி கொடுத்துள்ளனர் புஜாரா - ரகானே. இதனால் அடுத்த போட்டியில் இவர்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழாது எனத்தெரிகிறது. தொடர்ந்து இதே போன்று விளையாடினால் சதமடிப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது.
Recommended Video

காரணம் என்ன
புஜாராவின் மனநிலை குறித்து பேசியிருந்த சல்மான் பட், எப்போதெல்லாம் புஜாரா கடும் அழுத்தமான சூழலில் சிக்குகிறாரோ, அப்போதெல்லாம் மிகவும் நம்பிக்கையுடன் விளையாடுகிறார். ப்ளேயிங் 11ல் இடம் கிடைக்காது என்ற சூழல் வரும்போது தான் அவரின் சுதந்திரமான ஆட்டம் வெளிப்படுகிறது. கடந்தாண்டு ஆகஸ்டில் இதே போன்ற பிரஷரில் தான் இங்கிலாந்துக்கு எதிராக 91 ரன்கள் அடித்தார். தற்போது மீண்டும் அது நிரூபணம் ஆகியுள்ளது. புஜாராவின் மனநிலை குறித்து பேசியிருந்த சல்மான் பட், எப்போதெல்லாம் புஜாரா கடும் அழுத்தமான சூழலில் சிக்குகிறாரோ, அப்போதெல்லாம் மிகவும் நம்பிக்கையுடன் விளையாடுகிறார். ப்ளேயிங் 11ல் இடம் கிடைக்காது என்ற சூழல் வரும்போது தான் அவரின் சுதந்திரமான ஆட்டம் வெளிப்படுகிறது. கடந்தாண்டு ஆகஸ்டில் இதே போன்ற பிரஷரில் தான் இங்கிலாந்துக்கு எதிராக 91 ரன்கள் அடித்தார். தற்போது மீண்டும் அது நிரூபனம் ஆகியுள்ளது.


Click it and Unblock the Notifications