
இந்தியா பின்னடைவு
அந்த அணியின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை நீண்ட நேரம் கழித்து பிரித்த நிலையில் கேப்டன் டீன் எல்கர் மற்றும் ரேசி வான் டர் டுசேன் ஆகியோர் இணைந்து ரன் வேட்டை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த அணி 3ம் நாளின் முடிவு வரை 118 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது. வெற்றி பெற இன்னும் 8 விக்கெட்களில் 122 ரன்கள் தேவை.

மழை குறுக்கீடு
எனவே இன்றைய நாளில் எப்படியாவது 8 விக்கெட்களை எடுத்துவிட வேண்டும் என இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் இயற்கை மாற்றம் நடந்துள்ளது. போட்டி நடைபெறும் ஜோகசன்பெர்க் நகரத்தில் இன்று காலை முதலே மழைப்பொழிவு இருந்து வருகிறது. தற்போது கூட தூரல்கள் இருந்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

வானிலை நிலவரம்
அந்நாட்டு வானிலை நிலையம் வெளியிட்ட அறிக்கையின் படி இன்றைய நாள் முழுவதும் மழைப்பொழிவு இருக்கும் என்பதால் இன்று ஒட்டுமொத்த ஆட்டமும் தடைபடலாம் எனக்குறிப்பிடப்பட்டிருந்தது. ஒருவேளை மழைபாதிப்பு இன்று முழுவதும் இருந்தால் இந்திய அணிக்கு சாதகமாக அமையும்.

எப்படி
ஏனென்றால் 2 நாட்களில் 122 ரன்கள் அடிப்பது தென்னாப்பிரிக்க அணிக்கு சுலபமாக இருக்கும். நிதானமாக ரன்களை சேர்த்துவிடுவார்கள். ஆனால் இன்று ஆட்டம் தடைபட்டால், கடைசி நாளான நாளை ஒரே நாளில் தென்னாப்பிரிக்க அணி அழுத்தங்களுடன் 122 ரன்கள் அடிக்க வேண்டிய சூழல் ஏற்படும். அதுவும் பிட்ச்-ல் மழை ஈரம் அதிகமாக இருக்கும் என்பதால் பந்தில் நல்ல ஸ்விங் இருக்கும். எனவே விக்கெட்கள் மலமலவென சரிய வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications











