Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“நான் இல்லாமல் இந்தியா ஜெயித்துடுமா” கோலியின் விலகலில் புதிய திருப்பம்.. உண்மை காரணம் என்ன தெரியுமா

ஜோஹனஸ்பர்க்: விராட் கோலி, தனது கேப்டன்சி இல்லாமல் வெற்றி பெற முடியாது என்பதை நிரூபிக்க தான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இரு அணிகளும் மோதி வரும் 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கும் கடைசி நேரத்தில் கேப்டன் விராட் கோலியே போட்டியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது.

இந்திய அணியில் கோலிக்கு காயம் என்பதை இதற்கு முன் எத்தனை வருடங்களுக்கு முன்பு பார்த்திருப்போம் என ரசிகர்கள் குழம்பியுள்ளனர். ஏனென்றால் அப்படி உடற்தகுதியை பார்த்துக்கொள்ளும் கோலி திடீரென விலகியது பல மர்மங்களை உள்ளடக்கியுள்ளது.

2வது டெஸ்ட்

2வது டெஸ்ட்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி கோலியின் 100வது டெஸ்டாக இருந்தது. ஆனால் அது தற்போது தள்ளிப்போயுள்ளது. கோலியின் விலகல் குறித்து பேசியிருந்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவருக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக உட்காரவைக்கப்பட்டதாக தெரிவித்தார். இதனால் கே.எல்.ராகுலுக்கு அடித்த அதிர்ஷ்டம் என ரசிகர்களின் கவனம் திரும்பியது.

புதிய திருப்பம்

புதிய திருப்பம்

இந்நிலையில் புதிய பூகம்பம் கிளம்பியுள்ளது. கேப்டன்சி விவகாரத்தில் விராட் கோலி மீண்டும் மன உளைச்சலில் இருப்பதாகவும், நான் இல்லாமல் இந்திய அணி எப்படி வெற்றி பெற்றுவிடும் என்பதை பார்த்துவிடுகிறேன் என்பதற்காக தான் 2வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேட்டன் சர்மா கருத்து

சேட்டன் சர்மா கருத்து

மீண்டும் இந்த பிரச்சினை எழுவதற்கு காரணம், சமீபத்தில் தேர்வர்கள் குழு தலைவர் சேட்டன் சர்மா கூறிய புது கருத்து தான். அதாவது விராட் கோலி டி20 கேப்டன்சியில் இருந்து விலகிய போது அவரிடம் பதவி விலக வேண்டாம் என பிசிசிஐ கேட்டுக்கொண்டதா இல்லையா என்பதில் கோலி - பிசிசிஐ இடையே மாறுபட்ட கருத்து இருந்தது. இதற்கு இறுதியாக வாய்த்திறந்துள்ள சேட்டன் சர்மா, கோலியிடம் பதவி விலக வேண்டாம் என பிசிசிஐ கேட்டுக்கொண்டதாக அறிவித்தார்.

மன உளைச்சலா?

மன உளைச்சலா?

இந்த கருத்தால் விராட் கோலி தான் கேப்டன்சி விவகாரத்தில் பொய் கூறுகிறாரா என குழப்பம் எழுந்தது. இதனையடுத்து விராட் கோலி கடும் மன உளைச்சலில் இருப்பதாக தெரிகிறது. எனது கேப்டன்சியை வைத்து தான் பிரச்சினை ஏற்படுகிறது, நான் இல்லாமல் எப்படி ஜெயிக்கிறது என்று பார்க்கிறேன் என்ற மனநிலையில் இருப்பதாக தெரிகிறது.

Recommended Video

Dinesh Karthik says decision has been taken on these two players | Oneindia Tamil
விராட் கோலி குணம்

விராட் கோலி குணம்

ஆனால் உண்மையில் கோலியின் குணம் அப்படிபட்டதா என்பது சந்தேகமே. ஏனென்றால் கடந்தாண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது கூட விராட் கோலி நம்பிக்கையுடன் வெளியேறினார். அந்த தொடரில் இந்தியா வரலாற்று வெற்றி பெற்றது. எப்படி நம்பிக்கையுடன் விட்டுச்செல்லும் கோலி, நான் இல்லாமல் இந்தியா ஜெயிக்காது என்ற மனநிலையில் இருந்திருக்க முடியும் என்ற கோணம் ஒருபுறம் உள்ளது. இதன் உண்மை நிலை தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

Story first published: Tuesday, January 4, 2022, 13:41 [IST]
Other articles published on Jan 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+