Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘அவசர புத்தி.. வசமாக சிக்கிய பண்ட்’.. கடைசி 13 ஆட்டத்தில் ஸ்கோர் தெரியுமா?.. கொந்தளிகும் ரசிகர்கள்

ஜோகஸ்ன்பெர்க்: இந்திய அணியில் சட்டீஸ்வர் புஜாரா மீது இருந்த விமர்சனங்கள் தற்போது ரிஷப் பண்ட் மீது எழுந்துள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவை விட 27 ரன்கள் பின்னடைவை பெற்ற நிலையில் 2வது இன்னிங்ஸிலும் சொதப்பியுள்ளது.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

ஓப்பனிங்கில் கேப்டன் கே.எல்.ராகுல் 8 ரன்களுக்கும், மயங்க் அகர்வால் 23 ரன்களுக்கும் வெளியேறிய போதும் மிடில் ஆர்டரில் சீனியர் வீரர்கள் காப்பாற்றினர். அதிரடியாக விளையாடிய புஜாரா 53 ரன்களும், ரகானே 58 ரன்களும் விளாசினர். இதன் மூலம் தங்கள் மீது இருந்த விமர்சனங்களுக்கு அவர்கள் பதிலடி கொடுத்தனர்.

பண்ட் மீது விமர்சனம்

பண்ட் மீது விமர்சனம்

இந்நிலையில் அந்த விமர்சனங்கள் தற்போது ரிஷப் பண்ட் மீது திரும்பியுள்ளது. இந்த போட்டியில் களத்தில் 2 வீரர்களுமே புதிதாக இருந்த போதும், பண்ட் பொறுமை காக்கவில்லை. 3வது பந்திலேயே இரங்கிவந்து தூக்கி அடிக்க முயன்றார். டி20 ஆட நினைத்த அவரை டக் அவுட்டாக்கி அப்படியே வெளியேற்றினர் தென்னாப்பிரிக்க வீரர்கள். முதல் இன்னிங்ஸில் கூட அவர்17 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். பண்ட்-ன் இந்த மோசமான ஆட்டத்தால் தற்போது புதிய விஷயங்கள் கிளரப்பட்டு வருகின்றன.

மோசமான ரெக்கார்ட்

மோசமான ரெக்கார்ட்

கடந்தாண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முடிந்ததில் இருந்து தற்போது வரை ரிஷப் பண்ட் மிக மோசமாக விளையாடி வருகிறார். மொத்தமாக 13 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் வெறும் 250 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதாவது ஒரு போட்டிக்கு சராசரியாக 19.23 ரன்களை மட்டுமே அடிக்கிறார். ஸ்ட்ரைக் ரேட்டை மட்டும் 51 ஆக வைத்துள்ளார்.

 என்ன காரணம்

என்ன காரணம்

டி20 போட்டிகளில் அதிரடி காட்டும் கே.எல்.ராகுல் போன்ற வீரர்களே டெஸ்ட் தொடரில் நிதானமாக விளையாடுகின்றனர். ஆனால் ரிஷப் பண்ட்-ன் அவசர எண்ணம் ஸ்கோர் அடிக்க முடியாமல் போகிறது. எனினும் இதுவரை ரிஷப் பண்ட் மோசமாக விளையாடி வருவதை யாரும் பெரிதாக கண்டுக்கொள்ளப்படவில்லை. இன்றைய ஆட்டத்திற்கு பின்னர் இனி பண்ட்-ம் உற்று நோக்கப்படுவார் எனத்தெரிகிறது.

Story first published: Wednesday, January 5, 2022, 20:36 [IST]
Other articles published on Jan 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+