Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இளம் வீரரின் அவசர புத்தி”.. கோபத்தில் கவாஸ்கர் விட்ட ‘சுருக்’ வார்த்தைகள்.. இந்திய அணியில் சங்கடம்

ஜோகஸ்ன்பெர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் போது களத்திலேயே இளம் வீரரை சுனில் கவாஸ்கர் திட்டியது பரபரப்பாகியுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை ( 202) விட 127 ரன்கள் முன்னிலை பெற்ற தென்னாப்பிரிக்க அணி 229 ரன்களை குவித்தது.

2வது டெஸ்ட்

2வது டெஸ்ட்

இதனையடுத்து தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் ஓப்பனிங் ஜோடி அடுத்தடுத்து வெளியேற சீனியர் வீரர்கள் புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். தங்களுக்கான கடைசி வாய்ப்பு என்பதால் ரஹானே 58 (78), புஜாரா 53 (86) அரைசதம் விளாசி அணியை மீட்டனர்.

பண்ட் மீது புகார்

பண்ட் மீது புகார்

இதன் பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். புதிதாக வந்த ஹனுமா விஹாரி மட்டும் 40 ரன்கள் குவித்தார். மற்றபடி முன்னணி வீரர்களான ரிஷப் பண்ட் டக் அவுட், அஸ்வின் 16, என ஏமாற்றத்தை கொடுத்தனர். இந்நிலையில் இதில் ரிஷப் பண்ட்-ன் விக்கெட் தான் அனைவருக்கும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.

நிதானம் இல்லை

நிதானம் இல்லை

டி20 போட்டிகளில் அதிரடி சதங்களை விளாசும் கே.எல்.ராகுல் கூட் டெஸ்டில் மிக நேர்த்தியாகவும், நிதானமாகவும் விளையாடுகிறார். ஆனால் ரிஷப் பந்த் டி20 போட்டியில் விளையாடுவதுபோல் 3ஆவது பந்திலேயே இறங்கி வந்து தூக்கியடிக்க முற்பட்டு, விக்கெட்டை பறிகொடுத்தார்.

கவாஸ்கர் கோபம்

கவாஸ்கர் கோபம்

இந்த விஷயத்தில் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடும் கோபமடைந்துள்ளார். பண்ட்- அவுட்டான போது கமெண்ட்ரி செய்துகொண்டிருந்த கவாஸ்கர், பண்ட் அவுட்டான முறையை நியாயப்படுத்தவே முடியாது. இது அவருடைய இயற்கையான ஆட்டம் எனக் கூறுவது சுத்த முட்டாள்தனம். முட்டாள் செய்யும் வேலை அது. பொறுப்பே இல்லாமல், தூக்கி அடிக்க முயன்று அவுட்டாகியுள்ளார். இதனை அவர் தனது இயற்கையான ஆட்டம் எனக்கூறிக்கொள்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

 பொறுப்பு வேணும்

பொறுப்பு வேணும்

ரகானே, புஜாரா போன்ற வீரர்கள் பொறுப்பினை தோள்களில் சுமந்து விளையாடியுள்ளனர். எனவே அவர்களுக்கு உதவும் வகையில் பின்னர் வரும் வீரர்களும் இருந்திருக்க வேண்டும். இந்திய அணி வீரர்களின் ஓய்வறையில் கூட ரிஷப் பண்ட்-டிடம் இந்த பிரச்சினையை தான் எழுப்புவார்கள் என நினைக்கிறேன் எனத்தெரிவித்தார்.

Story first published: Wednesday, January 5, 2022, 20:25 [IST]
Other articles published on Jan 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+