“கொஞ்சம் விட்டிருந்தா என்ன ஆயிருக்கும்”.. ரிஷப் பண்ட்-ன் சர்ச்சை பேச்சு.. 2வது டெஸ்டில் பரபரப்பு!
ஜோஹன்ஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் போது டீன் எல்கரை இந்திய வீரர் ரிஷப் பண்ட் வேண்டுமென்றே வம்பிழுத்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஜோஹன்ஸ்பெர்க் நகரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியின் தொடக்கம் முதலே சண்டைகள், வாக்குவாதங்கள், குசும்புத்தனங்கள் என பல சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

சுவாரஸ்ய விஷயங்கள்
குறிப்பாக ஆட்டத்தின் 3ம் நாளில் நிறைய சம்பவங்கள் நடைபெற்றன. அஸ்வினின் ஸ்டம்ப் மைக் ஆடியோ, ஜஸ்பிரித் பும்ராவின் திடீர் கோபம் என பல பிரச்சினைகள் சூபிடித்தன. இந்நிலையில் தான் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் -ம் தனது பங்கிற்கு சேட்டையை செய்துள்ளார்.

சர்ச்சை விக்கெட்
தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்யும் போது 28வது ஓவரை ரவிச்சந்திரன் அஸ்வின் ஓவர் வீசினார். அவர் வீசிய பந்தில் செட்டில் பேட்ஸ்மேனாக இருந்த கீகன் பீட்டர்சன் எல்.பி.டபள்யூ முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். ரிஷப் பண்ட் அவுட்டென்று மிகுந்த நம்பிக்கையுடன் கத்தியதால் கள நடுவர் எராஸ்மஸும் அவுட் கொடுத்தார்.

உண்மை
நடுவரின் முடிவில் திருப்தியடையாத பீட்டர்சன் ரிவ்யூவ் கேட்க முடிவெடுத்தார். ஆனால் மறுமுணையில் நின்றிருந்த கேப்டன் டீன் எல்கர், அவருக்கு அந்த வாய்ப்பை கொடுக்கவில்லை. இதனால் ரிவ்யூவ் எடுக்காமலேயே பெவிலியன் திரும்பினார். இறுதியில் பீட்டர்சனின் சந்தேகம் உண்மையானது. அவர் நாட் அவுட் தான் என்பது தெளிவாக தெரிந்தது.

பண்ட்-டின் குசும்பு
இந்த விஷயத்தில் மகிழ்ச்சியடைந்த ரிஷப் பண்ட், களத்தில் டீன் எல்கரை பார்த்து " வழி விடு.. வழி விடு.. இவர் தான் சூப்பர் கேப்டன். தன்னை பற்றி மட்டுமே எப்போதும் நினைக்கும் சுயநலமானவர்' என சர்ச்சைக்குரிய வகையில் வார்த்தைகளை விட்டார். அவர் இந்தி மொழியில் அவற்றை கூறியதால் பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்படவில்லை. ஒருவேளை ஆங்கிலத்தில் கூறியிருந்தால் பெரும் சர்ச்சை வெடித்திருக்கலாம்.


Click it and Unblock the Notifications