For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“இன்றே வெற்றி வேண்டும்”.. கபில் தேவ்-காக ரிஸ்க் எடுக்க துடிக்கும் இந்திய அணி.. காரணம் என்ன?

ஜேசகன்பெர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்றைய தினமே வெற்றி பெற்றால் பெரும் சர்ஃப்ரைஸ் காத்துள்ளது.

Recommended Video

Ashes Sydney Day 2 Highlights: Khawaja's Ton to Broad Fifer | AUS vs ENG

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதி வரும் 2வது டெஸ்ட் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணியை விட 27 ரன்கள் பின்னடைவில் இருந்த இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 240 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ்

தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ்

இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி மிகவும் நிதானமாக ரன்களை உயர்த்தி வருகிறது. அடுத்தடுத்து விக்கெட்கள் சரியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் டீன் எல்கர் நிலைத்து நின்று விளையாடி வருவதால் அந்த அணி 3ம் நாள் முடிவில் 118 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது. வெற்றி பெற இன்னும் 8 விக்கெட்களை வைத்து 122 ரன்களை எடுக்க வேண்டும்.

மழையின் குறுக்கீடு

மழையின் குறுக்கீடு

ஆனால் இன்றைய தினம் மழைக்குறுக்கிட்டதால் ஆட்டம் தொடங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது. எளிய இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா விளையாடி வருவதால், இந்த மழைப்பொழிவானது இந்திய அணிக்கு சாதகமான ஒன்றே ஆகும். ஏனென்றால் இன்று முழுவதும் ஆட்டம் ரத்து செய்யப்பட்டால், நாளை ஒரே நாளுக்குள் தென்னாப்பிரிக்க அணியை சுருட்டிவிட ஓரளவிற்கு வாய்ப்புகள் உள்ளது.

இந்திய அணியின் ஆசை

இந்திய அணியின் ஆசை

இந்நிலையில் இந்த போட்டியை இன்றே முடிக்க வேண்டும் என்ற ஆசையும் இந்திய அணிக்கு உள்ளது. இதற்கு காரணம் இந்திய முன்னாள் வீரர் கபில் தேவ் தான். முதல் உலகக்கோப்பையை பெற்றுக்கொடுத்த கபில் தேவ் இன்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே முதல் உலகக்கோப்பை வென்ற நாயகனின் பிறந்தநாளுக்கு, தென்னாப்பிரிக்க மண்ணில் பெரும் முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை பரிசாக அளிக்க காத்துள்ளனர்.

கவாஸ்கரின் கருத்து

கவாஸ்கரின் கருத்து

இதுகுறித்து பேசியிருந்த முன்னாள் வீரர் கவாஸ்கர், தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. எனவே இன்றைய தினம் அந்த பெரும் நிகழ்வை ஏற்படுத்தினால் கபில் தேவ்-ன் பிறந்தநாளுக்கு சிறந்த பரிசாக இருக்கும். கபில் தேவ்-ன் ரசிகர்கள் அணிக்குள் பலர் உள்ளனர். அவர்களுக்கும் இதே ஆசை தான் இருக்கும் என நினைக்கிறேன் எனத்தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, January 6, 2022, 16:23 [IST]
Other articles published on Jan 6, 2022
English summary
Team India wants to won the test series by today, planning to give a birthday gift for kapil dev
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+