Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“விராட் கோலியே இல்லை”.. 2வது டெஸ்டில் இந்திய ப்ளேயிங் 11ல் ட்விஸ்ட்.. முழு விவரம்

ஜோஹனஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலியே இல்லாத ப்ளேயிங் 11 அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி ஜோஹனஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் தொடங்கியுள்ளது.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஏற்கனவே முன்னிலையில் உள்ள நிலையில் 2வது டெஸ்டில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும்.

கோலியே இல்லை

கோலியே இல்லை

இவ்வளவு முக்கியமான போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஆனால் டாஸின் போதே பெரும் ட்விஸ்ட் ஒன்று நடந்தது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 2வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்றாக கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டிங் மாற்றங்கள்

பேட்டிங் மாற்றங்கள்

ஓப்பனிங்கை பொறுத்தவரையில் வழக்கம் போல கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்குகின்றனர். இதன் பின்னர் விராட் கோலியின் இடத்திற்கு ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டுள்ளார். மிடில் ஆர்டரில் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரகானே ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த டெஸ்டில் புஜாரா டக் அவுட்டான போதும், அவர் மீது டிராவிட் அதீத நம்பிக்கை வைத்துள்ளார்.

பவுலிங் திட்டம்

பவுலிங் திட்டம்

பவுலிங்கை பொறுத்தவரையில் இந்திய அணி மீண்டும் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னர் என்ற அதே ஃபார்முலாவை பயன்படுத்தியுள்ளது. ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் உமேஷ் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பும்ராவே காயத்தில் இருந்து மீண்டுவிட்டார்.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

வாண்டரர்ஸ் பிட்ச்-ஐ பொறுத்தவரையில் புற்கள் அதிகமாக இருப்பதால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதமாக இருக்கும். இங்கு நாளை மழைப்பொழிவுக்கு வாய்ப்பு உள்ளது என்பதால் ஸ்விங் அதிகமாக இருக்கும். எனவே 2வதாக பேட்டிங் செய்யும் அணிக்கு பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும், இதனால் முதலில் பேட்டிங் செய்து அதிக ஸ்கோரை அடிப்பது சரியான முடிவு என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Story first published: Monday, January 3, 2022, 17:37 [IST]
Other articles published on Jan 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+