For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“எதிர்பார்ப்புகள் வீண்”.. இந்தியா - தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் பிட்ச் ரிப்போர்ட்.. வானிலை நிலவரம்!

ஜோஹனஸ்பர்க்: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டிக்கான வானிலை மற்றும் பிட்ச் ரிப்போர்ட் அதிர்ச்சிகரமாக அமைந்துள்ளது.

3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஏற்கனவே 1 - 0 என முன்னிலை வகிக்கிறது. செஞ்சூரியனில் நடந்த ஆட்டத்தில் 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி ஜோஹனஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி இதில் வெற்றி பெற்றுவிட்டால் தொடரை கைப்பற்றிவிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கு மழை முட்டுக்கட்டை போட்டுள்ளது.

வெதர் ரிப்போர்ட்

வெதர் ரிப்போர்ட்

ஆட்டத்தின் 5 நாட்களிலுமே வானிலை எதிரியாக வந்து நின்றுள்ளது. முதல் நாளில் 50 % அளவிற்கு மழைக்கான வாய்ப்புகள் உள்ளது. டாஸின் போது எந்தவொரு இடையூறும் ஏற்படாது என்றும் மதியத்திற்கு மேல் ஒட்டுமொத்த ஆட்டமும் ரத்து செய்யப்படும் எனக்கூறப்பட்டுள்ளது. இதன் பின்னர் 2 மற்றும் 4ம் நாட்களின் போது வானிலை மிக மோசமாக உள்ளது. மழைப்பொழிவு இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதால் 2 நாள் ஆட்டங்கள் முழுவதுமாக ரத்தாகலாம்.

நம்பிக்கை தரும் நாட்கள்

நம்பிக்கை தரும் நாட்கள்

3வது மற்றும் கடைசி நாள் ஆட்டங்களின் போது ஓரளவிற்கு சூரியன் வெளியே வரும் என்பதால் குறிப்பிட்ட அளவிலான ஓவர்களை பார்க்கலாம். எனினும் வெறும் 3 நாட்கள் ஆட்டத்தை வைத்து ஒரு அணி வெற்றி பெறுவது மிகவும் கடினமான ஒன்றாகும். எனவே இப்போட்டி எவ்வளவு விறுவிறுப்பாக சென்றாலும் சமனில் முடிவடைய தான் அதிக வாய்ப்புள்ளது.

பிட்ச் அறிக்கை

பிட்ச் அறிக்கை

வாண்டரர்ஸ் பிட்ச்-ஐ பொறுத்தவரையில் வேகப்பந்துவீச்சாளர்களின் கோட்டையாக பார்க்கப்படுகிறது. இங்கு புற்கள் அதிகம் காணப்படுவதால் இந்த முறையும் இந்திய அணி 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னருடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை பொழிவு வேறு இருப்பதால் பந்தில் நல்ல ஸ்விங்க் இருக்கலாம்.

Recommended Video

Ashes Sydney Test: Broad, Khawaja Returns! | ENG vs AUS | OneIndia Tamil
பேட்ஸ்மேன்களின் டிப்ஸ்

பேட்ஸ்மேன்களின் டிப்ஸ்

இதனால் பேட்ஸ்மேன்கள் முதல் 8 முதல் 10 ஓவர்கள் வரை நிதானமாக நின்று பிட்ச்-ன் தன்மையை உணரவேண்டிய அவசியம் உள்ளது. அதன் பின்னர் பொறுமையாக விளையாடினால் மட்டுமே பெரிய ஸ்கோரை எட்ட முடியும். இதே போன்ற களம் தான் செஞ்சூரியன் டெஸ்டிலும் இருந்ததால் இந்திய அணி நம்பிக்கையுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, January 3, 2022, 17:01 [IST]
Other articles published on Jan 3, 2022
English summary
India vs South africa 2nd test Weather Forecast and Pitch Report at Johannesburg, Wanderers Stadium
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+