“விராட் கோலிக்கு என்ன ஆனது?”.. 2வது டெஸ்டில் இருந்து திடீரென விலகல்.. கவலையில் உள்ள ரசிகர்கள்!
ஜோஹனஸ்பர்க்: 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு என்ன ஆனது என்பது புரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Recommended Video
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி வாண்டரர்ஸ் மைதானத்தில் தொடங்கியுள்ளது.
இதில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஆனால் டாஸின் போது தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

இந்திய அணி மாற்றம்
டாஸ் போடுவதற்காக கேப்டன் விராட் கோலி களமிறங்க வேண்டும். ஆனால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் களமிறங்கினார். மேலும் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் விராட் கோலி இல்லையென்றும், அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் தான் கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கோலிக்கு என்ன ஆனது என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

கோலிக்கு என்ன ஆனது
இந்நிலையில் அதற்கு கே.எல்.ராகுல் பதில் கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கேப்டன் விராட் கோலிக்கு துரதிஷ்டவசமாக தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. கடைசி நேரம் வரை பிசியோ தெரபிஸ்ட்கள் அவரை கண்காணித்து வந்தனர். ஆனால் அவருக்கு காயம் சரியாகாததால் இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார் என ராகுல் கூறினார்.

காயத்தின் தன்மை
விராட் கோலியின் காயம் சிறிதாக தான் இருப்பதாகவும், அடுத்த டெஸ்ட் போட்டிக்குள் அவர் தயாராகிவிடுவார் என்றும் இந்திய அணியின் மருத்துவக்குழுவில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கோலியின் இடத்திற்கு ஹனுமா விஹாரி களமிறக்கப்பட்டுள்ளார்.

கேப்டன் வாய்ப்பு
முதல் முறையாக டெஸ்ட் அணியை வழிநடத்தும் வாய்ப்பை பெற்ற கே.எல்.ராகுல், ஒவ்வொரு இந்திய வீரருக்கும் தேசத்தின் வெற்றிகாக வழிநடத்த வேண்டும் என்ற கனவு இருக்கும். அந்தவகையில் என் முன் இருக்கும் சவால்களை நான் ஏற்பதில் பெருமை கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications