Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5வது முறையும் ரிஷப் பண்ட்க்கு லக் இல்ல.. தென்னாப்பிரிக்காவில் 3 மாற்றங்கள்.. தொடரும் ஏமாற்றம்

பெங்களூரு: இந்தியா, தென்னாப்பிரிக்க தொடர் தற்போது 2க்கு2 என்ற கணக்கில் சமனில் உள்ள நிலையில், தொடரை தீர்மானிக்க கூடிய 5வது போட்டி தற்போது தொடங்கியுள்ளது.

முதல் 2 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபாரமாக விளையாடியது. இதன் பின்னர் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாடி அசத்தினர்.

இதன் மூலம், இந்திய அணி தொடர்ந்து 2 போட்டியில் வெற்றி பெற்றது. இதனால் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

3 மாற்றம்

3 மாற்றம்

ரிஷப் பண்ட் தொடர்ந்து 5 முறை டாஸை இழந்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக கேசவ் மகாராஜ் களமிறங்கினார். தென்னாப்பிரிக்க அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஸ்டப்ஸ், ஹேண்டரிக்ஸ் மற்றும் ரபாடா சேர்க்கப்பட்டு, ஷாம்சி, பெவுமா மற்றும் யான்சென் நீக்கப்பட்டுள்ளனர்.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனுடன் இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளதாக மகாராஜ் தெரிவித்துள்ளார்.இந்திய அணியில் எவ்வித மாற்றமும் இல்லைமல், தொடர்ந்து 5 போட்டியிலும் ஒரே விரர்களை வைத்து விளையாடுகிறது. இதன் மூலம் காஷ்மீர் வீரர் உம்ரான் மாலிக்கிற்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

ரிஷப் பண்ட் ஏமாற்றம்

ரிஷப் பண்ட் ஏமாற்றம்

டாஸை இழந்தது குறித்து பேசிய ரிஷப் பண்ட், பல முறை முயற்சி செய்தும், இன்று வேலைக்கே ஆகவில்லை என்று கூறியுள்ளார். பெங்களூரு ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்பதால் முதலில் பேட் செய்து 180, 190 ரன்களை விளாசிய பிறகு, மீண்டும் பந்துவீசி விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்த வேண்டும் என்று கூறினார்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

இந்திய அணி 1, ருத்துராஜ், 2, இஷான் கிஷன். 3. ஸ்ரேயாஸ் ஐயர். 4. ரிஷப் பண்ட். 5. ஹர்திக் பாண்டியா, 6. தினேஷ் கார்த்திக். 7. அக்சர் பட்டேல். 8. ஹர்சல் பட்டேல். 9. புவனேஸ்வர் குமார். 10. சாஹல். 11 அவேஷ் கான்

தென்னாப்பிரிக்க அணி 1, குயின்டன் டி காக் , 2. ஹேண்டரிக்ஸ், 3. வெண்டர் டுசன், 4. டேவிட் மில்லர். 5. கிளாசன் . 6. லுங்கி நிகிடி 7. பிரிட்டோரியஸ். 8. கேசவ் மகாராஜ். 9. ஸ்டப்ஸ் 10. ரபாடா 11. நோக்கியா

Story first published: Sunday, June 19, 2022, 19:09 [IST]
Other articles published on Jun 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+