For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

HIT Wicket ஆன ஜித்தேஷ் சர்மா.. கொஞ்சம் கூட லக்கே இல்ல.. பவுண்டரிக்கு பந்து சென்றும் ஏமாற்றம்

ஜோகனஸ்பர்க் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது t20 போட்டியில் வாழ்வா சாவா என்ற கட்டத்தில் களமிறங்கிய இந்திய அணியின் இளம் வீரர் ஜித்தேஷ் ஷர்மா ஹிட் விக்கெட் ஆகி ஆட்டமிழந்தது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. திறமை வாய்ந்த வீரராக கருதப்பட்ட ஜித்தேஸ் ஷர்மா டி20 அணியில் தங்களுடைய இடத்தை தீர்மானித்துக் கொள்ள இந்த தொடர் நல்ல வாய்ப்பாக கருதப்பட்டது.

எனினும் கீழ் வரிசையில் களமிறங்கும் ஜித்தேஷ் சர்மாவுக்கு பெரிய அளவில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. மூன்றாவது டி20 போட்டியில் கூட 18.4 வது ஓவரில் தான் ஜித்தேஷ் சர்மா பேட்டிங் செய்ய களத்திற்கு வந்தார்.

India vs south africa 3ed t20 - Jitesh sharma got out by hit wicket

ஒரு பவுண்டரி அடித்த ஜிதேஷ் சர்மா இருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார். இதற்காக ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஜடேஜா பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது ஜடேஜா பந்தை அடிக்க அது மிஸ் ஆகி விக்கெட் கீப்பரிடம் சென்றது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஒரு ரன் எடுத்துவிடலாம் என ஜித்தேர் ஷர்மா ரன் ஓடினார்.

ஆனால் பந்துவீச்சாளர் முனையில் ஓடிய ஜடஜாவை தென்னாப்பிரிக்க வீரர்கள் ரன் அவுட் செய்தனர். இந்த நிலையில் இருக்கும் இரண்டு பந்தில் ரன் அடிக்க வேண்டும் என நினைத்த ஜிதேஷ் சர்மா கிரீஸ்க்கு உள்ளே சென்று நேராக தூக்கி அடித்தார். பந்து பௌண்டரிக்கு சென்றது. ஆனால் இந்த ஷாட்டை அடிக்கும் போது அவர் ஸ்டெம்பில் கால் வைத்து ஹிட் விக்கெட் என்ற முறையில் ஆட்டம் இழந்தார்.

இதனால் அந்த நான்கு ரன்கள் இந்தியாவுக்கு கிடைக்காமல் போனது. மேலும் தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்த ஜித்தேஸ் சர்மாவுக்கு இது ஏமாற்றமாக அமைந்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரசிகர்கள் கிரிக்கெட்டுக்கு திறமை இருந்தால் மட்டும் போதாது கொஞ்சமாவது அதிர்ஷ்டம் இருக்க வேண்டும்.

இந்த அதிர்ஷ்டம் இல்லாததால் தான் ஜித்தேஷ் சர்மா பௌண்டரி அடித்தும் ஹிட் விக்கெட் ஆகி ஆட்டம் இழந்து இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.இரண்டாவது t20 போட்டியில் ஒரு ரன் மட்டுமே அடுத்த ஜித்தேஷ் ஷர்மா இந்த டி20 போட்டியில் 4 ரன்கள் தான் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, December 14, 2023, 22:36 [IST]
Other articles published on Dec 14, 2023
English summary
India vs south africa 3ed t20 - Jitesh sharma got out by hit wicket
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+