ஜோகனஸ்பர்க் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி டாசை இழந்தாலும் முதலில் பேட்டிங்கை செய்தது.
சூரியகுமார் யாதவின் அபார சதத்தால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 21ரன்கள் எடுத்தது. இதனை எடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 95 ரன்களில் ஆட்டம் இழந்தது.இந்த நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

வரிசைப்படி பார்த்தால் இந்தியாவின் வெற்றிக்கு முதல் காரணம் ஜெய்ஸ்வாலின் அபார தொடக்கம் தான். கடந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு இரண்டு தொடக்க வீரர்களும் டக் அவுட் ஆனது தான் காரணமாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் கூட கில் எட்டு ரன்களிலும் திலக் வர்மா டக்அவுட் ஆகியும் வெளியேற ஜெய்ஸ்வால் தொடக்கத்தில் அபாரமாக நின்று ரன்களை சேர்த்தார்.
தென்னாப்பிரிக்கா பவுலர்களை தைரியமாக எதிர்கொண்டு அவர் 41 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து பின்னால் வரும் வீரர்களுக்கு ஊக்கத்தை கொடுத்தார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் சூரியகுமார் யாதாவின் அபார சதம் தான் வழக்கம் போல் அவர் தென்னாப்பிரிக்க பந்துவீச்சை பிரித்து மேய்ந்தார். 8 சிக்ஸர்கள் ஏழு பவுண்டரிகள் என 56 பந்துகளில் 100 ரன்கள் குவித்தார்.
மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ரன்களை சேர்க்காத நிலையில் சூரிய குமார் யாதவ் ஆட்டம் தனி ஆளாக இந்தியாவுக்கு வெற்றியை தேடி தந்தது இதேபோன்று இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றதற்கு மூன்றாவது காரணம் இந்தியாவின் தொடக்க பவுலிங் தான். கடந்த போட்டியில் மூன்று புள்ளி மூன்று ஓவரில் எல்லாம் 50 ரன்களை தென்னாப்பிரிக்கா கடந்தது. ஆனால் இம்முறை முகமது சிராஜ் முதல் ஓவரிலே ரன் ஏதும் கொடுக்காமல் கடும் நெருக்கடியை ஏற்படுத்தினார்.
இதேபோன்று முகேஷ் குமார் தன்னுடைய முதல் ஓவரிலே விக்கெட் எடுத்து அசத்தினார். இது தென்னாப்பிரிக்காவுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. இதேபோன்று ஆர்ஸ்தீப் சிங் இரண்டு ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இந்திய அணி வெற்றி பெற்றதற்கு நான்காவது முக்கிய காரணம் குல்திப்பியாதவின் மாயாஜால பந்துவீச்சு தான். அவர் 2.5 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா 95 ரன்களில் ஆட்டம் இழந்தது