For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சீனியராக இருந்தும் மரியாதை இல்லையா? ஜடேஜாவை பின்னுக்கு தள்ளிய டிராவிட்.. 2 வீரருக்கு முன்னுரிமை

ஜோகனஸ்பர்க் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியில் பேட்டிங் வரிசையில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது.இது ஜடேஜாவை கடுப்படையச் செய்தது. டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை கட்டமைக்கும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் பினிஷர் ரோலுக்கு டி20 உலக கோப்பையில் யார் வரப்போகிறார் என்பதுதான் ரசிகர்கள் மத்தியில் கேள்வியாக இருக்கிறது.இதற்கு ரிங்கு சிங் ஜித்தேஷ் சர்மா ஆகிய இரண்டு இளம் வீரர்கள் தற்போது பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

India vs south africa 3rd t20 - Dravid demoted jadeja in batting order

இதில் ரிங்கு சிங் தான் தற்போது முன்னிலையில் இருக்கிறார் என்பது ஊர் அறிந்த விஷயம் தான். காரணம் ரிங்கு சிங் இரண்டாவது டி20 போட்டியில் அதிரடியை காட்டி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார். இந்த நிலையில் சீனியர் வீரரும் அணியின் துணை கேப்டனுமான ஜடேஜா பிளேயிங் லெவனில் இருக்க பேட்டிங் வரிசையில் அவரைத் தாண்டி ரிங்கு சிங்குக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது.

சிஎஸ்கே அணிக்காக விளையாடும்போது கூட ஜடேஜா பேட்டிங்கில் நடு வரிசையில் களம் இறங்கி இருக்கிறார். ஆனால் இன்றைய ஆட்டத்தில் ரிங்குசிங் ஜித்தேஷ் சர்மா ஆகிய இரண்டு இளம் வீரர்களுக்கு பிறகு தான் ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் ஜடேஜா ஏழாவது இடத்தில் களமிறங்கி இரண்டு பந்துகளை தான் எதிர் கொண்டார்.

இது ஜடேஜாவுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்தாலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முடிவு எடுத்ததாக இந்திய அணி நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது. இதன் காரணமாக தான் இன்னும் பேட்டிங்கில் நன்றாக விளையாடக்கூடிய வீரர் தான் என்பதை உணர்த்தும் விதமாக வந்த உடனே பவுண்டரி அடிக்க ஜடேஜா முயற்சி செய்தார்.அணியின் அனுபவம் வாய்ந்த வீரராக விளங்கும் ஜடேஜா பேட்டிங் வரிசையில் நான்கு அல்லது ஐந்தாவது இடத்தில் களமிறங்க வாய்ப்பு தரப்பட வேண்டும் என்றும் அவர்களுடைய ரசிகர்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

Story first published: Friday, December 15, 2023, 0:05 [IST]
Other articles published on Dec 15, 2023
English summary
India vs south africa 3rd t20 - Dravid demoted jadeja in batting order சீனியராக இருந்தும் மரியாதை இல்லையா? ஜடேஜாவை பின்னுக்கு தள்ளிய டிராவிட்.. 2 வீரருக்கு முன்னுரிமை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+