Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியின் 4 பெரும் தவறுகள்.. தென்னாப்பிரிக்க சரித்திரத்தை மாற்ற தவறிய இந்தியா.. காரணங்கள் என்ன

கேப்டவுன்: அனுபவ வீரர்கள் குறைந்த பலவீனமான அணியாக மாறியுள்ள தென்னாப்பிரிக்காவிடம் 4 முக்கிய காரணங்களால் இந்திய அணி வெற்றியை பறிகொடுத்துள்ளது.

3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1 - 1 என சமநிலையில் இருந்த நிலையில் 3வது டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதில் மட்டும் வெற்றி பெற்றிருந்தால், தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பெருமையை இந்தியா பெற்றிருக்கும்.இந்தியாவின் ஆசை நிறைவேறாமல் போனதற்கு விராட் கோலி செய்த 4 முக்கிய தவறுகளே காரணமாக பார்க்கப்படுகிறது.

 டாஸில் தவறான முடிவு

டாஸில் தவறான முடிவு

தென்னாப்பிரிக்க களத்தில் முதலில் பேட்டிங் செய்த அணி அதிகளவில் வெற்றி பெற்றுள்ளது. இதன்படியே தான் விராட் கோலியும் டாஸ் வென்று பேட்டிங் எடுத்தார். ஆனால் அவர் வானிலையை கவனிக்க தவறிவிட்டார். ஆட்டத்தின் முதல் நாள் அன்று கடும் பனிப்பொழிவு இருந்தது. வெயில் மிக குறைவாக இருந்ததால் பிட்ச் ஈரப்பதத்துடன் காணப்பட்டது. இதனால் முதலில் பவுலிங் செய்த அணிக்கு நல்ல ஸ்விங் ஆனதால் இந்திய பேட்ஸ்மேன்களால் சமாளிக்க முடியவில்லை.

அதிகமாக ரன் அடித்திருக்க வேண்டிய இந்திய அணி 223 ரன்களுக்கெல்லாம் சுருண்டது. இதன் பின்னர் 2ம் நாளில் வெயில் வந்து பிட்ச் வரண்டு விட்டதால் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேனக்ளின் விக்கெட்களை எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் சிரமப்பட்டனர். இந்தியாவின் 2வது இன்னிங்ஸில் பேட்டிங் நன்றாக செய்திருக்கலாம். எனினும் முதல் இன்னிங்ஸில் அதிக முன்னிலையை பெற்றிருந்தால் கூட 2வது இன்னிங்ஸில்

இளம் வீரர்களுக்கு துரோகம்

இளம் வீரர்களுக்கு துரோகம்

முதல் 2 டெஸ்ட்களிலும் வாய்ப்பு வழங்கப்பட்ட புஜாரா மற்றும் ரகானேவுக்கு 3வது டெஸ்டிலும் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டது முக்கிய தவறாக பார்க்கப்படுகிறது. கிடைத்த வாய்ப்புகளில் தங்களின் திறமையை நிரூபித்துள்ள ஹனுமா விஹாரி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்த போட்டியில் வாய்ப்பு கொடுத்திருந்தால் மிடில் ஆர்டரில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். குறிப்பாக கடந்த 2 மாதங்களாக ஹனுமா விஹாரி தென்னாப்பிரிக்காவில் தான் டெஸ்ட் தொடர் விளையாடி அனுபவம் பெற்றிருந்தார். அவரை வெளியேற்றியது பெரும் தவறு.

பவுலிங் ப்ளான்

பவுலிங் ப்ளான்

பவுலிங் படையில் இந்தியாவின் கணக்கு தவறாகிவிட்டது என்று தான் கூற வேண்டும். தென்னாப்பிரிக்கா போன்ற களத்தில் நல்ல பவுன்சர் பந்துகள் எடுபடும். குறிப்பாக இஷாந்த் சர்மா போன்ற அதிக உயரமுடைய பவுலர்களை பயன்படுத்தியிருக்க வேண்டும் என வல்லுநர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கூறினர். 100 டெஸ்ட்களுக்கும் மேல் விளையாடிய அனுபவம் உள்ள இஷாந்தின் அறிவுரைகள் இங்கு பயன்பட்டிருக்கலாம். ஆனால் அவருக்கு பதிலாக உமேஷ் யாதவுக்கு வாய்ப்பு வழங்கினார் விராட் கோலி.

ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்

ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்

இந்திய அணியின் மிகப்பெரிய பலமே ஓப்பனிங் வீரர்கள் தான். முதல் டெஸ்டில் கூட கே.எல்.ராகுல் சதமடித்த பின்னர் இந்திய அணியில் பின் வரிசையில் வந்த வீரர்களும் நம்பிக்கையுடன் நல்ல ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் 3வது டெஸ்டின் 2 இன்னிங்ஸ்களிலுமே ஓப்பனிங் சொதப்பியது. ஒரு இன்னிங்ஸில் கூட 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்காததால் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

Story first published: Friday, January 14, 2022, 18:28 [IST]
Other articles published on Jan 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+