Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3வது டெஸ்டில் ரிஷப் பண்ட் நீக்கம்? பொறுப்பை கையில் எடுக்கும் சீனியர்.. டிராவிட் அதிரடி முடிவு- ஏன்?

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இருந்து இளம் வீரர் ரிஷப் பண்ட் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Pant Out Of Capetown Test? Saha's Tweet gives a hint | IND vs SA | OneIndia Tamil

இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டி இன்று கேப்டவுன் நகரத்தில் உள்ள நியூலாண்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.,

இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளுடன் சமனில் உள்ளதால் இறுதிப்போட்டி மீது அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

3வது டெஸ்ட் போட்டி

3வது டெஸ்ட் போட்டி

தென்னாப்பிரிக்க நாட்டில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியதே இல்லை. எனவே இன்று அதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது. இதே போல கேப்டவுன் மைதானத்திலும் இந்தியா இதுவரை வெற்றி பெற்றதே இல்லை என்பதால் மிகவும் கவனத்துடன் ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்து வருகின்றனர் விராட் கோலி மற்றும் டிராவிட். அந்தவகையில் முகமது சிராஜ் காயம் காரணமாக வெளியேறியுள்ளார். அவருக்கு மாற்றாக இஷாந்த் சர்மா களமிறங்குவார் எனத்தகவல் வெளியானது.

பண்ட் நீக்கம்

பண்ட் நீக்கம்

இந்நிலையில் மேலும் ஒரு மாற்றமாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்- ஐ நீக்க டிராவிட் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விருதிமான் சாஹாவின் 2 ட்விட்டர் பதிவுகள் தான் இதனை உறுதி செய்துள்ளது. கடைசியாக நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடிய சாஹா, தென்னாப்பிரிக்காவில் இதுவரை ஒரு ட்வீட் கூட போடாமல் இருந்தார். ஆனால் திடீரென நேற்று கேப்டவுனுக்கு வந்துவிட்டதாக தனது புகைப்படம் ஒன்றை போட்டுள்ளார். வழக்கமாக, தான் விளையாடும் போட்டிகளில் புகைப்படம் போடும் பழக்கம் உடையவர் எனத்தெரிகிறது.

இந்திய அணியின் பதிவு

இந்திய அணியின் பதிவு

இதே போல சாஹா போட்டுள்ள 2வது பதிவு மேலும் உறுதி செய்துள்ளது. அதாவது 3வது டெஸ்டிற்காக விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் பயிற்சி செய்வது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு, பணி செய்யும் நேரம் தொடங்கிவிட்டது எனக்குறிப்பிட்டுள்ளார். மற்றொரு புறம் இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களை பிசிசிஐ வெளியிடும். அதில் ரிஷப் பண்ட்-ன் புகைப்படம் ஒன்றுக்கூட இடம் பெறாததால், அவர் இப்போட்டியில் இருந்து நீக்கப்பட்டு, விருதிமான் சாஹா சேர்க்கப்படுவது உறுதியாகியுள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பின்னர் ரிஷப் பண்ட்-ன் ஃபார்ம் மோசமாக உள்ளது. இதற்கு உதாரணம், 3வது டெஸ்டின் போது மோசமான முறையில் ரிஷப் பண்ட் அவுட்டானது தான். இந்திய அணியின் டாப் ஆர்டர் அடுத்தடுத்து சரிந்த நிலையில், மிடில் ஆர்டரில் நிதானமாக ரன் சேர்க்க வேண்டிய பண்ட், 3வது பந்திலேயே இறங்கி வந்து பவுண்டரி அடிக்க முயன்றார். இதனால் டக் அவுட்டாகி வெளியேறினார். இது பல விமர்சனங்களை பெற்றது. கடந்த 6 மாதமாக ரிஷப் பண்ட் -ன் சொதப்பல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பெரும் சொதப்பல்

பெரும் சொதப்பல்

கடந்தாண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முடிந்ததில் தற்போது வரை ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் முதன்மை தேர்வாக உள்ளார். மொத்தமாக 13 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் வெறும் 250 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதாவது ஒரு போட்டிக்கு சராசரியாக 19.23 ரன்களை மட்டுமே அடிக்கிறார். ஸ்ட்ரைக் ரேட்டை மட்டும் 51 ஆக வைத்துள்ளார். இதன் காரணமாக தான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் சாஹாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும்

Story first published: Tuesday, January 11, 2022, 14:10 [IST]
Other articles published on Jan 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+