Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பண்ட்கான பெண்மணியின் பதற்றம்!!.. கோட்டை தாண்டாமலேயே சிங்கிள்.. 3வது டெஸ்டில் நடந்த சேட்டைகள்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் ரிஷப் பண்ட் செய்த சேட்டைகள் இணையத்தை கலக்கி வருகிறது.

Recommended Video

கடைசி வரை போராட்டம்.. சதம் அடித்து அசத்திய Rishabh Pant

இரு அணிகளும் மோதி வரும் 3வது டெஸ்ட் போட்டி கேப்டவுன் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால், முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வெல்லும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது.

பண்ட் சேட்டைகள்

பண்ட் சேட்டைகள்

ஆனால் எந்தவித பதற்றமும் இன்றி காணப்பட்ட ரிஷப் பண்ட் தனது சேட்டைகளை இந்த போட்டியிலும் செய்துள்ளார். அதில் நல்ல விஷயங்களும் உண்டு. 2வது இன்னிங்ஸின் போது முக்கிய வீரர்கள் சொதப்பிய நிலையில் ரிஷப் பண்ட் தான் சதமடித்து அணியை காப்பாற்றினார். அப்போது பந்துகள் பவுண்டரிகளுக்கு பறக்கும் என அனைவரும் பார்த்த போது, பண்ட்- பேட் வானத்தில் பறந்தன.

வேடிக்கை சம்பவம்

வேடிக்கை சம்பவம்

ஆட்டத்தின் 60வது ஓவரின் போது பண்ட்-காக டிஃபன்ஸ் ஃபீல்டிங் நிற்கவைக்கப்பட்டிருந்தது. அப்போது சாதூர்யமாக செயல்பட்ட அவர், பந்தை சிக்ஸருக்கு விளாசினார். ஆனால் பந்து லெக் சைட்டில் செல்ல, அவரின் பேட் கை நழுவி ஆஃப் சைட்டில் பறந்தது. விட்டிருந்தால் பேட்டே பவுண்டரி லைனுக்கு சென்றுவிடும் என்பது போல களத்தில் இருந்தவர்கள் சிரிப்பு முகத்துடன் இருந்தனர்.

மற்றொரு நிகழ்வு

மற்றொரு நிகழ்வு

இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே மற்றொரு சுவாரஸ்யம் இருந்தது. பொதுவாக டெஸ்டில் வைட் லைன் பந்துகளை யாரும் தொடமாட்டார்கள். ஆனால் மார்கோ ஜென்சன் வீசிய வைட் லைன்பந்தை வேண்டுமென்றே நகர்ந்து சென்று அடித்த ரிஷப் பண்ட், ரன்னும் ஓடவில்லை. பேட்ஸ்மேனின் கிறீஸுக்குள்ளே சிங்கிள் அடிப்பது போன்று நகைச்சுவை ஏற்படுத்தினார். இதனால் மைதானம் சிறிது நேரம் கலகல என்று இருந்தது. இப்படி ஒரு ரன்னிங்கை பார்த்ததே இல்லை என கமண்டேட்டர்ஸும் சிரித்தனர்.

பெண்ணின் பதற்றம்

பெண்ணின் பதற்றம்

இதே ஓவரின் 3வது பந்து, ரிஷப் பண்ட்-ன் பேட்டில் எட்ஜானது போன்று சத்தம் கேட்டது. அப்போது பண்ட் சதத்திற்கு அருகில் நெருங்கி இருந்தார். இப்படிபட்ட சூழலில் அவர் அவுட்டாகிவிடக்கூடாது என்று நினைத்த, மைதானத்தில் இருந்த ஒரு பெண்மணி.. மிகவும் பதற்றத்துடன் பிரார்த்தனை மேற்கொண்டார். இந்த நிகழ்வை மைதானத்தின் பெரிய திரையிலேயே காண்பித்தனர். அவர் வேண்டிக்கொண்டதை போன்றே பண்ட்-க்கு நாட் அவுட் கொடுக்கப்பட்டது.

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

மிகவும் பரபரப்புடன் காணப்பட வேண்டிய 3வது டெஸ்ட் போட்டியை ரிஷப் பண்ட் மிகவும் கலகலவென்று மாற்றினார். விரேந்திர சேவாக்கிற்கு பின்னர், இந்திய ரசிகர்களை டெஸ்ட் கிரிக்கெட்டையும் ரசிக்க வைக்கப்போகும் நபர் ரிஷப் பண்ட் தான் என ரசிகர்கள் கூறி பாராட்டி வருகின்றனர்.

Story first published: Thursday, January 13, 2022, 20:23 [IST]
Other articles published on Jan 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+