
3வது டெஸ்ட் போட்டி
இந்த போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தும். ஆனால் இந்த மைதானத்தில் அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளன. ஏனென்றால் போட்டி நடைபெறும் நியூலாந்து மைதானம் தென்னாப்பிரிக்க அணிக்கு அதிக வெற்றிகளை தேடிக்கொடுத்த ஒன்றாகும். இங்கு இதுவரை 58 போட்டிகளில் விளையாடி 26 வெற்றிகள், 21 தோல்விகளை சந்தித்துள்ளன, 11 போட்டிகள் டிராவாகும். எனவே இந்திய அணி சற்று கவனமாக இருக்க வேண்டும்.

இந்தியாவின் ரெக்கார்ட்
முதல் முறையாக இந்திய அணி 1993ம் ஆண்டு விளையாடியது. அதன் பிறகு ஆடிய 5 ஆட்டங்களில் 3 முறை தோல்விகளையும், 2 முறை சமனிலும் முடித்துள்ளது. ஆனால் அந்த தோல்விகள் 282 ரன்கள் வித்தியாசம்( 1997) , 5 விக்கெட்டுகள் வித்தியாசம் ( 2007), 72 ரன்கள் (2018) என மோசமான தோல்விகளே ஆகும். கடைசியாக இங்கு 2018ம் ஆண்டு மோதிய போட்டியிலும் தோல்வியே ஆகும்.

தென்னாப்பிரிக்க அணியின் ரெக்கார்ட்
இந்தியாவுக்கு எதிராக மட்டுமல்ல, மற்ற நாட்டு அணிகளுக்கும் இங்கு தென்னாப்பிரிக்காவை வீழ்த்துவது சாதாரணம் அல்ல. தென்னாப்பிரிக்க அணி, தனது சொந்த மண்ணில் அதிகப்படியான டெஸ்ட்களை விளையாடிய மைதானமாக கேப்டவுன் உள்ளது. அதே போல இங்கு தான் அந்த அணி இருப்பதிலேயே அதிகப்படியான டெஸ்ட் வெற்றிகளையும் பெற்றுள்ளது. இதுவரை 58 போட்டிகளில் விளையாடி 21 வெற்றிகள், 21 தோல்விகளை சந்தித்துள்ளன, 11 போட்டிகள் டிராவாகும்.

மிகவும் சாதகமான இடம்
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அணி ஒரே மைதானத்தில் அதிகப்படியான வெற்றிகளை பெற்ற பட்டியலில் தென்னாப்பிரிக்க - கேப்டவுன் மைதானம் தான் 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் ஆஸ்திரேலியா - பிரிஸ்பேன் மைதானம் உள்ளது. எனவே இப்படி மிகப்பெரிய ரெக்கார்டை கொண்ட தென்னாப்பிரிக்க அணியை இங்கு இந்தியா வெல்வது சாதாரண காரியம் அல்ல.

ஆறுதல் விஷயம்
தென்னாப்பிரிக்க அணி கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக ஒரு டெஸ்ட் போட்டியை கூட இங்கு ஆடவில்லை. கடைசியாக விளையாடிய போட்டியிலும் இங்கிலாந்து அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவே தற்போதைக்கு இந்திய அணிக்கு சாதகமான ஒன்று. ஆனால் அதிலும் சிக்கல் உள்ளது. 1962க்கு பிறகு கேப்டவுன் மைதானத்தில் தொடர்ச்சியாக 2 தோல்விகளை தென்னாப்ரிக்கா பெற்றதே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











