For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எல்கரின் டிஆர்எஸ் தான் தோல்விக்கு காரணம்?.. விராட் கோலி கூறிய விளக்கம்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!

கேப்டவுன்: இந்திய அணியின் தோல்விக்கு எல்கருக்கு சாதகமாக வந்த டிஆர்எஸ் முடிவுதான் என்பது குறித்து கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விறுவிறுப்பாக நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணி 2 - 1 என தொடரையும் இழந்தது.

தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை இந்தியா வென்றுவிடும் என காத்திருந்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே காத்துள்ளது.

புஜாரா, ரஹானேவின் டெஸ்ட் எதிர்காலம் என்ன? விராட் கோலி வெளியிட்ட முக்கிய தகவல்.. புஜாரா, ரஹானேவின் டெஸ்ட் எதிர்காலம் என்ன? விராட் கோலி வெளியிட்ட முக்கிய தகவல்..

 டிஆர்எஸ் தான் காரணமா?

டிஆர்எஸ் தான் காரணமா?

இந்த தோல்விக்கு தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் விக்கெட்டில் வழங்கப்பட்ட தவறான முடிவு தான் காரணம் என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். அஸ்வின் வீசிய பந்தில் எல்கர் எல்பிடபள்யூ ஆனார். கள நடுவரே அது அவுட்தான் என முழுமையாக நம்பிய நிலையில் பந்து பவுன்சாகி ஸ்டம்பில் படவில்லை என 3வது நடுவர் நாட் அவுட் கொடுத்தார். இதனால் கேப்டன் விராட் கோலி மற்றும் அஸ்வின் ஆகியோர் கடும் ஆத்திரமடைந்தனர்.

பாதிக்கப்பட்ட வீரர்கள்

பாதிக்கப்பட்ட வீரர்கள்

இந்த சம்பவத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த இந்திய வீரர்கள் 8 ஓவர்களுக்கு கவனத்தை சிதறியது நன்றாக தெரிந்தது. வெறும் 8 ஓவர்களில் 40 ரன்களை வாரி வழங்கினர். அதாவது 20 ஓவர்களில் கொடுக்க வேண்டிய ரன்னை 8 ஓவர்களிலேயே கொடுத்துவிட்டனர். இதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக பேசி வருகின்றனர்.

கோலி விளக்கம்

கோலி விளக்கம்

இந்நிலையில் விராட் கோலி விளக்கம் கொடுத்துள்ளார். அதில், டிஆர்எஸ் குறித்து இனி நான் ஒன்றுமே கூறுவதற்கு இல்லை. களத்தில் என்ன நடந்தது என்பது எங்களுக்கு மட்டும் தான் தெரியும். வெளியில் உள்ள மக்களுக்கு தெரியாது. என்னைப்பொறுத்தவரை நான் செய்தது சரிதான். அந்த சமயத்தில் முடிவு வேறு மாதிரியாக வந்திருந்து நாங்கள் 3 விக்கெட்களை அடுத்தடுத்து எடுத்திருந்தால், ஆட்டத்தின் முடிவே எங்கள் பக்கம் சாய்ந்திருக்கும். அப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும், அதுதான் ஆட்டத்தின் திருப்புமுணை என்று எனக்கூறினார்.

சர்ச்சையாக்க விரும்பவில்லை

சர்ச்சையாக்க விரும்பவில்லை

நீண்ட நேரமாக எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நாங்கள் நெருக்கடி கொடுக்கவில்லை என்பது தான் தோல்விக்கு காரணம். அந்த ஒரு சம்பவம் ஆட்டத்தின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. இனி அது குறித்து நான் பேசி சர்ச்சையாக்க விரும்பவில்லை. அது முடிந்துவிட்டது, கடந்து செல்ல வேண்டும் எனக்கூறியுள்ளார்.

சர்ச்சைக்கு விளக்கம்

சர்ச்சைக்கு விளக்கம்

விராட் கோலியின் டிஆர்எஸ் குற்றச்சாட்டு பெரும் சர்ச்சைகளை கிளப்ப, தென்னாப்பிரிக்காவின் ஒளிபரபரப்பு நிறுவனமான சூப்பர் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் விளக்கம் கொடுத்திருந்தது. வீடியோவில் அஸ்வினின் பந்து எப்படி பவுன்சானது என காட்சிப்படுத்தியது. எனினும் அதன் மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை பெரிய அளவு நம்பிக்கை வரவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.

Story first published: Friday, January 14, 2022, 20:45 [IST]
Other articles published on Jan 14, 2022
English summary
Virat kohli gives his explanation over DRS Controversy in India vs South africa 3rd test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X