Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி vs தென்னாப்பிரிக்கா.. ஒற்றை புகைப்படம் சொல்லும் கதை.. இணையத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்!

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலியின் ஒரே ஒரு புகைப்படம் ஒட்டுமொத்த இன்னிங்ஸையும் விளக்கியுள்ளதாக ரசிகர்கள் பரபரப்பை கிளப்பி வருகின்றனர்.

Recommended Video

Kohli’s Incredible six off Rabada in Cape Town | IND vs SA 3rd Test | OneIndia Tamil

இரு அணிகளும் மோதி வரும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் மோசமாக சொதப்பியுள்ளது.

முதல் இன்னிங்ஸ் ஆட்டம்

முதல் இன்னிங்ஸ் ஆட்டம்

தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 12 ரன்களுக்கும், மயங்க் அகர்வால் 15 ரன்களுக்கும் நடையை கட்டினர். 94 ரன்கள் பார்ட்னர்ஷுப் கொடுத்து வந்த புஜாராவும் 43 ரன்களுக்கு அவுட்டானார். இதனால் ஒட்டுமொத்த பிரஷரும் கோலியின் மீது விழுந்தது. மிடில் ஆர்டரில் இருந்த ரகானே, (9), ரிஷப் பண்ட் (27), அஸ்வின் ( 2 ) என வந்த வேகத்தில் வெளியேறினர்.

கோலி ஒன் மேன் ஷோ

கோலி ஒன் மேன் ஷோ

மறுமுனையில் தூணை போன்று நின்றிருந்த விராட் கோலி, ஒன்மேன் ஷோ காட்டினார். ஆக்ரோஷமாக ஆடும் அவர் வழக்கத்திற்கு மாறாக மிகவும் நிதானமாக விளையாடினார். கோலி ஃபார்மில் இல்லை என அசால்டாக நினைத்த தென்னாப்பிரிக்க பவுலர்கள் அவரை அவுட்டாக்க முடியாமல் சோர்ந்தே விட்டனர்.

மொத்தம் 201 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு கிளாசிக் அடித்து 79 ரன்கள் சேர்த்தார். அவரின் ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 223 என்ற ஸ்கோரை எட்டியது.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

இந்நிலையில் கோலி எப்படி தென்னாப்பிரிக்க பவுலர்களை எதிர்கொண்டார் என்பது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சிக்ஸர், மாஸ்டர் கவர் ட்ரைவ், ஸ்ட்ரைட் ட்ரைவ் என பழைய கிளாசி கோலி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. குறிப்பாக தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் அனைவரும் கோலியை பார்ப்பது போன்றும், ஒற்றையாளாக கோலி அவர்களை எதிர்கொள்வது போன்றும் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

முன்னாள் வீரர் கருத்து

முன்னாள் வீரர் கருத்து

இதுகுறித்து பதிவிட்டுள்ள முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர், இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை இந்த ஒரே ஒரு புகைப்படம் கூறிவிட்டது எனக்கூறியுள்ளார். மேலும் சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை செல்போன் மற்றும் லேப்டாப்களில் வால்பேப்பராக வைக்கப்போவதாக கூறி மகிழ்ந்துள்ளனர்.

Story first published: Wednesday, January 12, 2022, 13:08 [IST]
Other articles published on Jan 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+