
பண்ட் மீது விமர்சனங்கள்
முதல் 2 போட்டிகளில் தோல்விகளை சந்தித்த இந்திய அணி, அடுத்த 2 போட்டிகளில் அட்டகாசமான கம்பேக் கொடுத்தது. இதனால் விமர்சனங்களுக்கும் முற்றிப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் இந்திய அணி கேப்டன் ரிஷப் பண்ட் மீது மட்டும் இன்னும் விமர்சனங்கள் ஓய்ந்த பாடில்லை.

காரணம் என்ன
நடப்பு தொடரில் ரிஷப் பண்ட்-ன் கேப்டன்சி சரியில்லை என கூறுகின்றனர். முதல் 2 போட்டிகளில் அக்ஷர் மற்றும் தினேஷ் கார்த்திக்கை ஏன் டாப் ஆர்டரில் களமிறக்கவில்லை. பவுலர்களை சரியாக ரொட்டேட் செய்யவில்லை எனக் குற்றச்சாட்டுக்கள் குவிந்தன.
Recommended Video

ஜாகீர் கான் பேச்சு
இந்நிலையில் இதுகுறித்து ஜாகீர் கான் பேசியுள்ளார். அதில், ரிஷப் பண்ட் ரன்கள் அடிக்கும் போது, ரசிகர்கள் அவரை பற்றி பேசுகின்றனர். அவர் அடிக்கவில்லை என்றாலும் பேசுகின்றனர். அவருக்கு சில கால அவகாசத்தை நாம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அவரின் கேப்டன்சி வித்தியாசமாக அமைந்துள்ளது.

என்ன ஸ்பெஷல்
எப்போதுமே கட்டத்தை விட்டு, வெளியே யோசிக்கிறார். வியூகங்களை விட, அவரின் உள்ளுணர்வுகளை மட்டுமே அவர் அதிகம் பின்பற்றுகிறார். இதற்காக பல ரிஸ்க்-களும் எடுக்கப்படுகின்றனர். அவரிடம் உள்ள ஒரே பிரச்சினை, ரிஸ்க் எடுக்கும் போதெல்லாம், அதனை சரிசெய்யும் திட்டத்தை பண்ட் வைத்துக்கொள்ளவில்லை. அதை சரி செய்ய வேண்டும் என ஜாகீர் கான் கூறியுள்ளார்.

இன்று கட்டாயம்
இதே போல பேட்டிங் மிக மோசமாக அமைந்துள்ளது. கடந்த 4 போட்டிகளில் 29, 5, 6, 17 ஆகிய ரன்களை மட்டுமே குவித்துள்ளார். இதனால் ரிஷப் பண்ட்-ஐ டி20 தொடரில் இருந்து நீக்கிவிட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. எனவே இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டே தீர வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











