For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“கடவுளே காப்பாற்று”.. வாழ்வா சாவா போட்டியில் ரகானே செய்த விஷயம்.. சங்கடத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்!

செஞ்சூரியன்: அவுட்டாகிவிடக்கூடாது என்பதற்காக இந்திய வீரர் அஜிங்கியா ரகானே செய்த விஷயம் இணையத்தில் பரவி வருகிறது.

Recommended Video

Rahane reminds himself to ‘watch the ball’ in Centurion | IND vs SA | OneIndia Tamil

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

 சிறப்பான தொடக்கம்

சிறப்பான தொடக்கம்

தொடக்க வீரர் கே.எல்.ராகுலின் சதம் மற்றும் மயங்க் அகர்வாலின் அரைசதத்தால் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 272 ரன்கள் எடுத்துள்ளது. இந்த போட்டியில் அனைவரையும் கவனத்தை ஈர்த்த மற்றொரு விஷயம் ரகானேவின் ஆட்டம் தான். இது அவருக்கு வாழ்வா சாவா போட்டியாக இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துவிட்டு வந்துள்ளார். 81 பந்துகளை சந்தித்துள்ள அவர் எந்தவித பதற்றமும் இன்றி 40 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் உள்ளார்.

சுவாரஸ்ய விஷயம்

சுவாரஸ்ய விஷயம்

ரகானேவின் இந்த கம்பேக்கிற்கு பின்னால் சுவாரஸ்ய விஷயம் ஒன்று ஒளிந்துள்ளது. பொதுவாக ஆட்டத்தின் இடையே ரகானே கடவுளை வேண்டுவது வழக்கமான ஒன்று. ஆனால் நேற்று தென்னாப்பிரிக்க பவுலர்கள் வீசிய ஒவ்வொரு பந்தின் போதும் அவர், "watch the ball" பந்தை கவனித்து ஆட வேண்டும் என தனக்கு தானே தைரியப்படுத்திக்கொண்டு ஆடினார். இதனால் சீரான வேகத்தில் தனது ஸ்கோரை உயர்த்தியுள்ளார்.

சோகமான நிலைமை

சோகமான நிலைமை

இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் வீரராக பார்க்கப்படும் ரகானேவுக்கு இப்படி ஒரு நிலைமை வந்ததை கூறி ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். கடந்த 21 இன்னிங்ஸ்களில் ரகானே வெறும் 19.57 என்ற சராசரியை மட்டுமே வைத்துள்ளார். அதுவும் 2021ம் ஆண்டில் ஒரு சதத்தை கூட அவர் அடிக்கவில்லை என்பது மற்றொரு சோகமான விஷயம் ஆகும்.

ரகானேவுக்கு இருக்கும் நெருக்கடி

ரகானேவுக்கு இருக்கும் நெருக்கடி

இதனால் ரகானேவின் துணைக்கேப்டன் பதவி பறிக்கப்பட்டு, அவரை அணியில் இருந்தே நீக்கும் முடிவுக்கு பிசிசிஐ தேர்வுக்குழு வந்துவிட்டது. எனினும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் விராட் கோலி ஆகியோரின் கோரிக்கையை ஏற்று அவருக்கு கடைசி வாய்ப்பாக தென்னாப்பிரிக்க தொடர் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் இந்த தொடரில் சதம் அடித்துவிட்டால், இனி அவரின் இடத்திற்கு எந்த ஆபத்தும் இருக்காது.

Story first published: Monday, December 27, 2021, 10:52 [IST]
Other articles published on Dec 27, 2021
English summary
Ajinkya Rahane repeatedly reminds himself to ‘watch the ball’ for getting high score in boxing day test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+